2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சேதன விவசாயத்தில் முன்னுதாரணமாக திகழும் Ma’s

A.P.Mathan   / 2015 ஜூன் 08 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ணும் பழக்கம் இலங்கையில் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளதுடன், எமது உணவில் அதிக காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நல்ல கொழுப்பு உணவுகளை சேர்த்துக்கொள்ளுதலானது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஆரம்பத்தை உண்டாக்குவதாகவும் அமைந்துள்ளது.

முன்பெல்லாம் அரிதாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த சேதன உணவு வகைகள் தற்போது அனைத்து சுப்பர் மார்கெட்டுகளிலும் சுலபமாக கிடைக்கப் பெறுகின்றன. சூழல் பேண்தகைமைக்கான அர்ப்பணிப்பு மற்றும் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வு ஆகியவற்றுக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள Ma’s ட்ரொபிகல் ஃபூட் புரொசசிங் (பிரைவட்) லிமிடெட் நிறுவனமானது சேதன விவசாயத்துறையில் கவனம் செலுத்தி அதன் வர்த்தகத்தை முன்னெடுத்து வருகின்றது.

'சேதன விவசாயம்' என்பது வெறும் ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்வதற்கும் அப்பாற்பட்டது. சமூக தொழில் முனைவோருக்கு சமுதாயம் மற்றும் இயற்கை மீது அதிகப்படியான அர்ப்பணிப்பு காணப்படுகிறது' என Ma’s ட்ரொபிகல் ஃபூட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ அல்விஸ் தெரிவித்தார். 

இருப்பினும், ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் நிலையாண்மை குறித்த கேள்விகள் சமுதாயத்தில் எழுந்த வண்ணமுள்ளன. நாம் உண்ணும் உணவுகள் பெரும்பாலனவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கின்றன. வழக்கமான மற்றும் சேதன பயிர்ச்செய்கை உணவுகளுக்கிடையிலான வேறுபாடுகள் எவை? சேதன உணவு மிகச் சிறந்தவையா? மரபணு உயிரிகள் மாற்றம் என்னென்ன? சேதன உணவுகளுக்கு சான்றளிக்கும் அமைப்புக்கள் எவை? மற்றும் அவை எவ்வாறு செயல்படுகின்றன? போன்ற கேள்விகள்  எழுப்பப்படுகின்றன.

மேற்கூறிய கேள்விகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அல்விஸ், 'தாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா என்பதும், அவர்களது விருப்ப தெரிவானது சிறிய விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் சிறப்பான சூழலுக்கு சாதகமான பங்களிப்பு வழங்குகிறதா என்பதே நுகர்வோருக்கு முக்கியமாகும்' என்றார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேதன விவசாய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட முன்னணி உணவு உற்பத்தியாளர் எனும் வகையில் Ma’s ஆனது விவசாயிகளுக்கு தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ளக்கூடிய திறனை அதிகரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் விவசாயத்தில் ஈடுபடவுள்ள தலைமுறையினர் வெற்றிகரமாக விவசாயத்தை முன்னெடுக்க தேவையான விவசாய அமைப்பொன்றையும் நிறுவியுள்ளது.

எமது சேதன விவசாய தெரிவுகளின் உற்பத்தி செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து உள்நாட்டு மூலப்பொருட்களும் எமது உள்நாட்டு விவசாய குழு ((SAFENET- Small Agri- Farmer Enterprises Network) இடமிருந்து பெறப்படுகின்றன. சேதன மற்றும் வர்த்தக கண்காட்சிகளுக்கான சர்வதேச சான்றிதழ் தரங்களை அடைவதற்கான உதவிகளை நாம் வழங்கி வருகின்றோம். மீதமுள்ள மூலப்பொருட்கள் சான்றளிக்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது.

விவசாய சமூகத்தின் மத்தியில் சேதன விவசாயத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் Ma’s ஆனது அதன் சமூக பொறுப்புணர்வு நோக்கத்தின் கீழ் அதன் உணவுகள், மசாலா பொருட்கள் மற்றும் குறிப்பாக MA’s Happy Life Kitchen இன் உற்பத்தி தெரிவுகளுக்கான மூலப்பொருட்களை வழங்கும் விவசாயிகளின் நிலைபேறுதன்மைக்கு பங்களிப்பு செய்து வருகிறது.

'எதிர்கால தலைமுறையினருக்காக பண்ணைகளின் நீடித்தன்மைக்கும், அவர்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என Ma’s ட்ரொபிகல் ஃபூட்ஸ் நிறுவனத்தின் பிரதம உடன்பாட்டு அதிகாரி ஷெரான் அல்விஸ் தெரிவித்தார். 'பின்நவீனத்துவ விவசாய தொழில்நுட்பம், ஆவணப்படுத்தல், சிறந்த வேளாண்மை நடைமுறைகள், வரவு-செலவு திட்டமிடல், உற்பத்தி தர அறிவு போன்ற சேதன விவசாயம் தொடர்பான எமது நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிவரும் அதேநேரம், எமது விநியோக அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விவசாயிகளுக்கு அபிவிருத்தி திட்டமிடல் குறித்த பயிற்சிகளையும் வழங்கி வருகின்றோம். ஒரு சில சமயங்களில் சிறியளவிலான விவசாயிகளுக்கு நிதி வசதிகளையும் நாம் வழங்கி வருகின்றோம்' என மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு விவசாயிகளின் மேம்பாட்டிற்கு உதவும் பாரம்பரியத்தையும், இலங்கையருக்கு வீட்டுத்தோட்டத்தில் பயிர்களை வளர்ப்பதற்கான ஆர்வத்தையும் உருவாக்கிய Ma’s ஆனது சேதன உணவுகள் உங்கள் வாழ்விற்கு எந்தளவு முக்கியமானது என்பதில் அனைவருக்கும் தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உங்கள் உணவிற்காக நீங்கள் செலுத்தும் பணமானது உள்நாட்டு விவசாயம் அல்லது சுற்றுச்சூழல் நிலையாண்மைக்கு எந்தளவு பங்களிப்பை செலுத்துகின்றது என்பதை தீர்மானிக்க வேண்டியமை நுகர்வோர் என்ற வகையில் மிக முக்கியமாகும். எனவே நீங்கள் அடுத்தமுறை உணவு வகைகளை வாங்கும் போது இதனை நினைத்துப் பார்க்கவும்!


  Comments - 0

  • Kusal Tuesday, 09 June 2015 05:14 AM

    I would like to start a home garden. so I want to know more information about this. try to send this information in Tamil language for easy understanding. Thanks.Kusal

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X