2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கங்காராம விகாரைக்கு வர்ணப்பூச்சு பூசிய லங்கெம் ரொபியலக்

A.P.Mathan   / 2015 ஜூன் 10 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொபியலக் வர்ணப்பூச்சு வகைககளின் உற்பத்தியாளர்களும் சந்தைப்படுத்துனருமான லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது இலங்கையில் சமய அனுஷ்டானங்கள் நடைபெறும் இடங்களில் 'வர்ண பூஜா' (Varna Pooja) முன்னெடுப்பை நடாத்துவதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தொடர்ந்து கடைப்பிடிக்கும் வகையில், 'தேசிய வெசாக் பண்டிகை 2015' இன் போது கொழும்பிலுள்ள கங்காராம விகாரை மற்றும் சீமாமாலக்கய ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் பொருட்டு பெருமளவிலான வர்ணப்பூச்சுகள் மற்றும் மர மேற்பூச்சுகளை அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளது. 

லங்கம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளரான றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'கங்காராமய மற்றும் அலரி மாளிகை என்பவற்றினால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படும் கொழும்பின் வெசாக் ஒளி விளக்கு போட்டியானது ஒவ்வொரு நாள் இரவிலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களையும் பார்வையாளர்களையும் தம்பக்கம் கவர்ந்திழுக்கின்றது. எனவே, இந்த தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு கங்காராம விகாரை மற்றும் சீமாமாலக்கய ஆகிய இரு வழிபாட்டிடங்களுக்கும் வர்ணப்பூச்சு பூசுகின்றமையானது எமக்கு  கிடைக்கும் சிறப்புரிமையும் பெருமிதமும் என்று நாம் கருதுகின்றோம். ஆகவேதான், இந்த வர்ண பூஜாவின் ஒரு அங்கமாக வேறுபட்ட வர்ணங்களிலான எனாமல் மற்றும் எமல்சன் வர்ணப்பூச்சுகள், வார்ணிஸ் வகைகள், தின்னர் மற்றும் மரத்திற்கான பிரைமர் வகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 300 லீற்றருக்கும் அதிகமான உற்பத்திகளை நாம் அன்பளிப்பாக வழங்கி இருக்கின்றோம்' என்றார். 

இந்த நல்லெண்ண சமிக்கை தொடர்பில் கங்காராம விகாரையின் பிரதம மதகுருவான வணக்கத்திற்குரிய கலபொட ஞானசார தேரர் (பொடி ஹாமுதுருவோ) கருத்துத் தெரிவிக்கையில், 'புண்ணிய காரியமான இந்த நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக நான் லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு நன்றி கூற விரும்புகின்றேன். அவர்கள் எம்மிடமிருந்து எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் எம்முடைய கோரிக்கைக்கு உடனடியாகவே சாதகமான பதிலை அளித்தார்கள். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும். அத்துடன் 'தான' (தானம்) அல்லது 'தர்மம் கொடுத்தல்' என்ற உண்மையான பௌத்த மெய்ப்பொருளை எடுத்துக் காட்டுவதாகவும் இது அமைந்துள்ளது' என்றார். 

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் லங்கெம் நிறுவனம் கண்டி தலதா மாளிகையுடன் ஒன்றிணைந்து 'வர்ண பூஜா' முன்முயற்சியை முதன்முதலாக ஆரம்பித்து வைத்தது. ஒரு தனிப்பட்ட நிறுவனம் பொறுப்பெடுத்துள்ள இவ்வகையான ஒரேயொரு முன்முயற்சி என்ற வரலாற்று பதிவை இது கொண்டுள்ளது. தலதா மாளிகை என்பது பௌத்த உலகில் மிகவும் புனிதமானதும் வணக்கத்திற்குரியதுமான ஒரு அடையாளச் சின்னமாக திகழ்கின்றது. அந்த வகையில் எசல பெரஹராவை முன்னிட்டு கடந்த பத்து வருடங்களாக தலதா மாளிகை கட்டிடத் தொகுதிக்கு முழுமையாக வர்ணப்பூச்சு பூசியமையானது எமக்கு கிடைத்த பெருமிதமும் சிறப்புரிமையும் ஆகும்' என்று வீரசிங்க மேலும் தெரிவித்தார். 

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலான இக் காலப்பகுதியில், நாடு முழுவதிலும் உள்ள அதிக எண்ணிக்கையான தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கும்  லங்கெம் நிறுவனம் வர்ணப்பூச்சு பூசியிருக்கின்றது. மிகக் குறிப்பாக – பெல்லன்வில ரஜமஹா விகாரை, களனி ரஜமஹா விகாரை மற்றும் மடு தேவாலயம் போன்ற புனிதஸ்தலங்கள் இவற்றுள் உள்ளடங்குகின்றன.

'இந்த முன்முயற்சியானது ஒரு ஒரு புண்ணிய காரியமாக இருப்பதற்கு புறம்பாக, இவ்வாறான முன்னெடுப்புக்களின் ஊடாக இலங்கையின் வளம்மிக்க கலாசாரம் மற்றும் மரபுரிமைக்கு எம்மால் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டும் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். லங்கெம் ரொபியலக் நிறுவனம் முற்றுமுழுதாகவே உள்நாட்டில் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைந்த ஒரு கம்பனியாகும். எனவேதான் இலங்கையில் வாழும் மக்களுக்கு நாம் மிகவும் கடன்பட்டவர்களாக இருக்கின்றோம்' என்று திரு. வீரசிங்க கூறி முடித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X