2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் லங்கெம்

A.P.Mathan   / 2015 ஜூன் 22 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கெம் ரொபியலக் நிறுவனமானது, இயற்கையின் வர்ணங்களை ஆராதிக்கும் வகையிலமைந்த ஒரு அற்புதமான புகைப்படப் போட்டியை நடாத்துவதன் மூலம் உலக சுற்றாடல் தினத்தை இம்மாதம் கொண்டாடுகின்றது. 'இயற்கை புகைப்பட போட்டி' என்று அழைக்கப்படும் இப் போட்டியானது ரொபியலக் பேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/LankemRobbialacSL) 2015 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது புகைப்படங்களை தரவேற்றம் செய்யுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. 

ஒவ்வொரு பங்குபற்றுனரும் மொத்தமாக ஐந்து புகைப்படங்களை சமர்ப்பிக்க முடியும். அனைத்து புகைப்படங்களும் இயற்கையுடன் தொடர்புபட்டதாக இருப்பதுடன், இயற்கையின் வர்ணங்களை ஆராதிப்பதாகவும் அமைய வேண்டும். இலங்கை புகைப்படவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நடுவர்கள் குழுவினரால் முதல் மூன்று அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். அவர்கள் நற்சான்றிதழ்கள் மற்றும் ரொபியலக் வர்ணப்பூச்சை கொள்வனவு செய்வதற்கான பெறுமதிவாய்ந்த வவுச்சர்களை பரிசாக பெறுவார்கள். 

இப்போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் கணணி மென்பொருட்களை பயன்படுத்தி மோசடியான முறையில் மாற்றியமைக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என பங்குபற்றும் விண்ணப்பதாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அதேவேளை சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்களில், பங்குபற்றுனர்களின் பெயர்கள் அல்லது ஏனைய விபரங்கள் காணப்படக் கூடாது. போட்டிக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற புகைப்படங்களின் ஒட்டுமொத்த பதிப்புரிமை அதனை தரவேற்றம் செய்கின்றவர்களுக்கே உரியதாகும். பதிப்புரிமை தொடர்பான எந்தவொரு விடயத்திற்கும் லங்கெம் நிறுவனம் பொறுப்பாளியாக மாட்டாது. 

லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் ரீ. வீரசிங்க கூறுகையில், 'இயற்கை எனும் தாய் மனிதகுலத்திற்கு நன்கொடையாக அளித்த வர்ணத்தட்டுடன் இணைந்து பணியாற்றுவதே எமது வணிகத்தின் ஒரு முக்கிய பகுதியாக காணப்படுகின்றது. உலக சுற்றாடல் தினம் இம்மாதம் கொண்டாடப்படுகின்ற சூழ்நிலையில், இயற்கையின் வர்ணங்களை ஆராதிக்கவும் சுற்றாடலுக்கு பொருத்தமான கௌரவ அந்தஸ்தை வழங்குவதற்கும் நாம் தீர்மானித்தோம். இந்த போட்டியின் மூலம், எதிர்கால தலைமுறையினருக்காக சுற்றாடலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதிலும் நாம் கூடிய கவனம் செலுத்துகின்றோம். இதனை எமது பொறுப்பாக நாம் கருதுகின்றோம். தேசிய மட்டத்திலான இப் போட்டி தொடர்பாக எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலிப்புக்கள் எம்மை மிகவும் ஊக்கப்படுத்துவதாக காணப்படுகின்றன. இப்போட்டிக்காக ஏற்கனவே நாம் அதிகளவிலான நுழைவு விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X