2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ்

A.P.Mathan   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரயம்பதி ஆகிய பிரதேசங்களில் தனது இரு புதிய கிளைகளை பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி லிமிடெட் திறந்துள்ளது. பெரன்டினா குழுமத்தின் தலைவர் துலான் டி சில்வா இந்த இரு கிளைகளையும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்திருந்தார். களுவாஞ்சிக்குடி கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செயலாளர் எம்.கோபாலரட்னம் பங்குபற்றியிருந்தார். அவருடன் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் ப்ளான் இன்டர்நஷனலின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்ச்சித்திட்டங்களுக்கான தலைமை அதிகாரி டேவிட் சதானந்தன், பாம் ஈஸ்ட் திட்ட முகாமையாளர் எஸ்.பன்னீர்செல்வம், பெரன்டினா டிவலப்மன்ட் சேர்விசஸ் பொது முகாமையாளர் இரோஷன் அழகரட்னம், பெரன்டினா மைக்குரோஃபினான்ஸ் இன்ஸ்ரிடியுட் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ரஞ்சனி யோகநாதன், குளுவாஞ்சிக்குடி மற்றும் ஆரயம்பதி கிளைகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட முகாமையாளர்களான அஜித்சிறி மற்றும் விதுர்ஷனா மற்றும் பெரன்டினா டிவலப்மன்ட் சேர்விசஸ் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் குஷாந்த் பெனடிக்ட் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி சங்கங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.  

2015 ஜனவரியில் பெரன்டினா மைக்குரோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி லிமிடெட் ஸ்தாபிக்கப்பட்டது. நுண்நிதியியல் சேவைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வினைத்திறன் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தன பெரன்டினா மைக்குரோஃபினான்ஸ் இன்ஸ்ரிடியுட் ஸ்தாபனத்துக்கு மேலதிகமாக இந்த ஸ்தாபனம் நிறுவப்பட்டிருந்தது. 2013 டிசம்பர் மாதத்தில் பெரன்டினா மைக்குரோஃபினான்ஸ் இன்ஸ்ரிடியுட் ஸ்தாபிக்கப்பட்டது முதல், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் தனது கிளை ஒன்றை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது. 78 மில்லியன் ரூபாயை கடன் தொகையாக வழங்கியுள்ளதுடன், மொத்தமாக 2710 பேரிடையே இந்த தொகை பகிரப்பட்டுள்ளது. வாழைச்சேனை கிளையின் மொத்த கடன் நிலுவைத் தொகை 2015 மார்ச் 31 ஆம் திகதி அன்று 64 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. நிதிச் சேவைகளை வழங்குவதற்கு மேலதிகமாக, 600க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் 38 க்கும் அதிகமான நிறுவனசார் அபிவிருத்தி பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது. தனியார் துறையில் ஆகக்குறைந்த வட்டி வீதங்களுக்கமைய பெரன்டினா கடன்களை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது காணப்படும் வறுமை நிலைமைக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார செயற்பாடுகளின் விஸ்தரிப்பு மற்றும் சாதாரண கடன் வசதிகளுக்கான சமூக தேவைகள் போன்றவற்றை பெரன்டினா குழுமம் கவனத்தில் கொண்டு, இந்த நுண்நிதியியல் சேவைகளை விஸ்தரித்துள்ளது. நுண்நிதியியல் சேவைகளுக்கு மேலதிகமாக, திறமை வாய்ந்த வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள், இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகள், தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகுளை பெரண்டினா முன்னெடுத்து வருகிறது. 1200 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை பெரன்டினா வழங்கியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X