2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Arpicoவின் மேலும் மூன்று தினசரி சுப்பர் மார்க்கெட்டுக்கள்

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ, ஹன்வெல்ல மற்றும் அத்திடிய நகரங்களில் Arpico அதன் சொந்த இடங்களில் மூன்று புதிய தினசரி சுப்பர் மார்க்கெட்டுக்களைத் திறந்துள்ளது. வாடிக்கையாளர் வசதிகளில் கூடிய கவனம் செலுத்தும் இந்த புதிய நிலையங்கள் பிரதான நகரங்களையும் சனத்தொகை கூடிய புற நகர் பகுதிகளையும் இலக்கு வைத்து  அமுல் செய்யப்படும் அதன் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு அங்கமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தினசரி சுபர் மார்க்கெட்டுக்கள் என வகைப் படுத்தப்படும் Arpico நிலையங்கள் Arpico வின் முழுமையான பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்கக் கூடியவை. உற்பத்தி பன்முகத் தன்மை, வர்த்தக முத்திரை பல் தெரிவு, உப சேவைகள், விரிவான இட வசதி என Arpico சுபர் சென்டர்களின் எல்லா வசதிகளையும் உள்ளடக்கியதாகவே இவை அமைந்துள்ளன.

'கடந்த ஆறு மாத காலங்களில் நாங்கள் ஆறு தினசரி சுப்பர் மார்க்கெட்டுக்களையும் ஒரு சுப்பர் ஸ்டோரையும் திறந்துள்ளோம்' என்று கூறினார் றிச்சர்ட் பீரிஸ் விநியோகஸ்தர்கள் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் மினோத் டி சில்வா. 'சுபர் மார்க்கெட் இடவசதிகளைப் பொறுத்தமட்டில் Arpico தனித்துவமானதோர் அடையாளத்தை கொண்டுள்ளது. ஏனெனில் அது பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்துகின்றது. அந்த வகையில் இந்த மூன்று புதிய நிலையங்களும் அவற்றின் இலக்குகளை அடைந்துள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.

இலக்கம் 1/56 சிலாபம் வீதி வென்னப்புவ என்ற முகவரியில் அமைந்துள்ள Arpico நிலையம் ஏனைய Arpico தினசரி நிலையங்களில் இருப்பது போன்றே விரிவான உற்பத்திகளையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அத்தோடு வென்னப்புவ நகரில் வழமையான உற்பத்திப் பொருள்களுக்கு மேலதிகமாக இலத்திரனியல் உபகரணங்களை சில்லறையாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே நிறுவனமாகவும் இது திகழ்கின்றது.

இலக்கம் 273 வித்தியாலய மாவத்தை ஹன்வெல்ல என்ற முகவரியில் அமைந்துள்ள Arpico தினசரி நிலையம் கார் பராமரிப்பு உற்பத்திகள், விளையாட்டுப் பொருள்கள், றப்பர் உற்பத்திகள், போன்ற வீட்டுப் பாவனைப் பொருள்களோடு ஏனைய வழமையான உற்பத்திகளையும் சேர்த்து விற்பனை செய்யும் இந்தப் பிரதேசத்தின் ஒரேயொரு சுப்பர் மார்க்கெட்டாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்திடிய நகரின் புதிய Arpico நிலையம் இலக்கம் 144 பிரதான வீதி அத்திடிய என்ற முகவரியில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்களாக மிக அகலமான விரிவான இடவசதி, விசாலமான வாகனத் தரிப்பிடம் என்பன அமைந்துள்ளன. இங்கு ஒரே நேரத்தில் சுமார் 40 வாகனங்களை நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது.

ARPICO வின் சகல நிலையங்களிலும் வாகனத் தரிப்பிடத்துக்கான போதிய வசதிகள் அமையப் பெற்றுள்ளதோடு வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், பால் உற்பத்தி பொருள்கள், சுத்தமான பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகள், கடல் உணவுகள், சமையல் அறை பொருள்கள், கண்ணாடி பொருள்கள் போன்ற வீட்டுப் பாவனைப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், காகிதாரிகள், தோட்ட வேலை பொருள்கள், இலத்திரனியல் பொருள்கள் என்பன விற்பனைக்கு உள்ளன.

ARPICO சங்கிலித் தொடர் வர்த்தக நிலையமானது தற்போது  17 சுபர் சென்டர்கள், 19 காட்சியறைகள், மற்றும் 21 தினசரி மினி சுபர் மார்க்கெட்கள் என்பனவற்றைக் கொண்டதாகும். இந்த நிலையங்களில் போதிய வாகன தரிப்பிட வசதி, பட்டியல்கள் கொடுப்பனவு, வங்கி வசதிகள், வாழ்வியல் தேவைகள், விரிவான வீட்டு பாவனைப் பொருள்கள், இலத்திரனியல் உபகரணங்கள், சமையலறை பொருள்கள், தளபாடங்கள், என்பன உட்பட விரிவான பல்வேறு வகை உற்பத்திகளை ARPICO நிலையங்களில் மிகவும் சௌகரியமான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X