2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இந்திரா பினான்ஸ் நிறுவனம் செரண்டிப் பினான்ஸ் என பெயர் மாற்றம்

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி இந்திரா பினான்ஸ் நிறுவனத்தைப் பொறுப்பேற்று ஒன்பது மாத காலத்தின் பின் தனக்கு முற்றிலும் சொந்தமான அந்த இணை நிறுவனத்தை வரையறுக்கப்பட்ட செரண்டிப் பினான்ஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் கொமர்ஷல் வங்கியால் 2014 செப்டம்பர் 1ல் பொறுப்பேற்கப்பட்டது. இந்த கம்பனி இனிமேல் புதிய பெயரால் அழைக்கப்படுவதோடு புதிய வர்த்தக முத்திரையின் கீழ் இனம் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன லீசிங் சந்தை, வாடகைக் கொள்வனவு, ஈட்டுக் கடன், நுகர்வோர் நிதியியல் ஆகிய துறைகளில் தனது நிலையை தக்கவைத்துள்ள செரண்டிப் நிதி நிறுவனம் இலங்கையில் 11 கிளைகளைக் கொண்டுள்ளது. தற்போது நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியின் பூரண ஆதரவுடன் தனது நிலையை மேலும் தக்க வைக்கவும் விஸ்தரிக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

இந்திரா பினான்ஸ் நிறுவனத்தைப் பொறுப்பேற்றமை மற்றும் அதனை புதிய பெயரில் மீள் அறிமுகம் செய்துள்ளமையானது அதன் குத்தகை செயற்;பாடுகளை மேலும் விஸ்தரித்து புதிய வாடிக்கையாளர் பிரிவொன்றுக்குள் ஊடுறுவ வழிவகுக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. செரண்டிப் நிதி நிறுவனம் ஊடாக வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையிலான குத்தகைத் தெரிவுகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன என்று வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் கூறினார்.

'கொமர்ஷல் வங்கி அதன் மூலோபாய விரிவாக்கத் திட்டத்தின் கீழ் குத்தகைப் பிரிவை அபிவிருத்திக்கு உரிய ஒரு பிரிவாக இனம் கண்டுள்ளது. இதுவரை தூண்டிவிடப்படாத சந்தைப்பிரிவு மற்றும் வர்த்தக வரிசையில் குத்தகை பிரிவு இனம் காணப்பட்டுள்ளது. இந்திரா பினான்ஸ் இதில் கொண்டிருந்த வளங்களில் இப்போது கவனம் செலுத்தப் படவுள்ளது' என்று துரைரட்ணம் மேலும் கூறினார். 'எனவே இந்த நிறுவனம் பொறுப்பேற்கப்பட்டமையானது அதனோடு சம்பந்தப்பட்ட சகலருக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் நன்மை அளிப்பதாகவே அமையும்'என்றார்.

செரண்டிப் பினான்ஸ் என்ற புதிய பெயரானது அதன் தலைமை அலுவலகம் மற்றும் கிளை நிறுவனங்கள் எல்லாவற்றிலும் மீள் வர்த்தக முத்திரை, மீள் விளம்பர ஏற்பாடுகள் என எல்லா அம்சங்களிலும் மாற்றத்தைக் கொண்டிருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X