2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மாதத்தை கொண்டாடும் லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம்

A.P.Mathan   / 2015 ஜூலை 09 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத் திட்டத்திற்கு அமைய 2015ஆம் ஆண்டு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மாதம் தொடர்பான நிகழ்வு இலங்கை துறைமுக அதிகார சபையில் அமைந்துள்ள லபார்ஜ் சீமேந்து பொதியிடல் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த வருடத்திற்கான தொனிப்பொருளானது I’m Open, I’m Committed, I’m Uncompromised ஆகிய தொனிப் பொருள்களில் சுமார் நான்கு வருடகாலமாக எவ்வித விபத்துக்களும் இன்றி இதனை முன்னெடுக்க நிறுவனம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுள்ளதாக இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிகாரிகளைப் பயன்படுத்தி ஊழியர்களை திடப்படுத்தியதாகவும் மற்றும் அவர்களது புதிய நோக்கு நிலைகளுக்கு அமைய தமது பாதுகாப்பு தொடர்பாக தாங்களுக்கே நிர்வகிக்கக் கூடிய விதத்தில் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக லபார்ஜ் நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரதானி அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.

இம்முறை லபார்ஜ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும், அதில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்சி (Good Practice) என்ற தொனிப் பொருளின் கீழ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்ற சிறந்த கருத்தை முன்வைத்த ஜனக்க சமரசிங்க, சானக்க, லக்ஷ்மன் மற்றும் இந்திக்க முனசிங்க ஆகியோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

3 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டோருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரம் வரைதல் போட்டியில் 'வீட்டில் பாதுகாப்பு' (Safety at home) என்ற தொனிப் பொருளில் பங்குபற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. 

அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த லபார்ஜ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அநுராக் காக், தூசிகள் இல்லாத சூழல் ஒன்றை அமைப்பதற்கான எண்ணத்தை அனைத்து பிரிவினர் மத்தியிலும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தர்.

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரதானி அத்துல கருணாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரது ஐக்கியமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அதனால் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த வழிநடத்தல்களை இனிவரும் காலங்களில் முறையாக பின்பற்றி சர்வதேச ரீதியில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X