2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Chatham Luxury இன் புதிய கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களை அறிமுகம் செய்துள்ள Chopard

A.P.Mathan   / 2015 ஜூலை 10 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் நாட்டின் பிரபல்யமான வர்த்தக நாமமான Chopard, தனது மட்டுப்படுத்தப்பட்ட கைக்கடிகாரத் தெரிவுகள் மற்றும் ஆபரணங்களை இலங்கையில் அதன அங்கீகாரம் பெற்ற விற்பனையாளரான Chatham Luxury இல் அறிமுகம் செய்துள்ளது. விசேடமாக அமைந்த இந்த தெரிவுகளில் சில முற்கூட்டியே விசேட பதிவுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் மட்டும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளன. இந்த தெரிவுகளை Chopard & Cie இன் சர்வதேச விற்பனை முகாமையாளர் சேவியர் லஸ்ஸெர்ரே அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தெரிவுகளில், Happy Diamonds அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தன. Chopard அலங்கார வடிவமைப்பின் உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலமைந்த Happy Diamonds கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் காலத்துக்கேற்ற வகையிலும், நவீன தோற்றத்தை கொண்டனவாகவும், பிரத்தியேகமான பாணியை கொண்டனவாகவும் அமைந்துள்ளன. Chopard ஆபரணத் தெரிவுகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் தடவையாக இது அமைந்துள்ளது. Chopardஇன் Happy Sport கைக்கடிகாரத் தெரிவுகள் பெறுமதி மிக்க டயமன்ட்கள் மற்றும் துருப்பிடிக்காத இருப்பு கொண்டு கண்கவர் வகையில் அலங்கார வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. பல உயர் மட்ட Happy Sport கைக்கடிகாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. Chopard ஆபரணங்களின் ஒவ்வொன்றும் 18 கெரட் வெள்ளை, பிங்க் மற்றும் மஞ்சள் நிற தங்கம் கொண்டு செதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் Happy Diamond கைக்கடிகாரத் தெரிவுகள் எப்போதும் 18 கெரட் தங்கத்தை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. 

Heure du Diamant தெரிவுகளைச் சேர்ந்த சில கைக்கடிகாரங்களும், Chopardஇன் Art Deco அலங்காரத்துக்கு ஒப்பானவையாக அமைந்துள்ளன. புத்தாக்க பணிப்பாளரான கரோலின் ஸ்கெயுஃபேல், டயமன்ட்கள் மீது கொண்டுள்ள அதீத ஈடுபாட்டின் காரணமாக, நுணுக்கமான முறையில் அவற்றை வடிவமைக்க உதவியாக அமைந்திருந்தன. பேர்ள், சில்வர், பச்சை மற்றும் சொக்லேட் வர்ணங்களிலான கற்களைக் கொண்டு கைக்கடிகாரங்களை வடிவமைக்க உதவியிருந்தார். 

Chopard & Cie இன் சர்வதேச விற்பனை முகாமையாளர் சேவியர் லஸ்ஸெர்ரே கருத்து தெரிவிக்கையில், 'Chatham மற்றும் Chopard இடையே மிகவும் நீண்ட கால அடிப்படையிலான ஒன்றிணைவு ஏற்படுத்தப்படும் என்பதில் நாம் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளோம். சொகுசான வர்த்தக நாமங்களை கொண்டுள்ளமை தொடர்பில் நாம் நன்கு அறிந்துள்ளோம். எமது வர்த்தக நாமத்தின் சிறப்புகளை உள்நாட்டவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த அவர்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

Chatham Luxury கைக்கடிகாரங்களின் பணிப்பாளர் சித்தார்த் ஹைட்ராமணி கருத்து தெரிவிக்கையில், 'Chopard கொண்டுள்ள விசேடத்துவம் வாய்ந்த அலங்காரத் தெரிவுகளை அனுபவிப்பதற்கு இலங்கை தயாராகவுள்ளது என நாம் கருதுகிறோம். Happy Sports தெரிவுகளைச் சேர்ந்த மிகவும் விசேடமான கைக்கடிகாரங்களை வாடிக்கையாளர்கள் தெரிவு செய்து கொள்வனவு செய்ய முடியும். அத்துடன் Chopard கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டுள்ள விசேடத்தன்மை மற்றும் வடிவமைப்புத்தன்னமை ஆகியவற்றை வெளிப்படுத்தவும் எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.

முன்னணி ஆடைத்தொழில்துறைசார்ந்த நிறுவனமான Hirdaramani குழுமம் மற்றும் ஆபரணங்கள் விற்பனையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈடுபட்டு சர்வதேச ரீதியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ள சிஃவானி ஜுவல்லர்ஸ் ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்து Chatham Luxury Watches ஸ்தாபனம் நிறுவப்பட்டிருந்தது. இலங்கையில் பல்வேறு வர்த்தக நாமங்களைச் சேர்ந்த கடிகாரங்களை விற்பனை செய்யும் முதலாவது விற்பனையகமாக Chatham திகழ்வதுடன், உலகின் முன்னணி சொகுசு வர்த்தக நாமங்களைச் சேர்ந்த கடிகாரங்களின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளராகவும் திகழ்கிறது. Chatham 100 ஆண்டுகளுக்கு மேலான கடிகார வடிவமைப்பாளர்கள் எனும் பெருமையைக் கொண்டுள்ளது. Chatham Boutique இல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள வர்த்தக நாமங்களைச் சேர்ந்த எந்தவொரு கடிகாரங்களையும் வாடிக்கையாளர்கள் ஓடர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Chopardஇன் பாரம்பரியம் என்பது படிப்படியாக நுணுக்கமாக செதுக்கப்பட்டது. 1860 இல் Louis-Ulysse Chopard என்பவரினால் Sonvillier பிரதேசத்தில் சிறிய விற்பனை தொகுதி ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இந்த இளம் கடிகார வடிவமைப்பாளரின் ஆளுமைகள் பற்றிய கருத்துக்கள் ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்ததுடன், அவரின் நுணுக்கமான வடிவமைப்புக்காக Chopard கடிகாரங்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்டது. 1963 இல், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கடிகார தயாரிப்பாளரான heir Karl Scheufele இந்நிறுவனத்தை பொறுப்பேற்றிருந்தார். இவரினால் உலகம் முழுவதும் படிப்படியாக வர்த்தக நாமத்தின் விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரப்பப்பட ஆரம்பித்தது. இன்று, Chopard என்பது இலகுவாக இனங்காணப்படக்கூடிய சொகுசான வர்த்தக நாமங்களில் ஒன்றாகவும், உலகளாவிய ரீதியில் விற்பனையாளர்களைக் கொண்ட நாமமாகவும் திகழ்கிறது.

கோல் ஃபேஸ் கோர்ட் கொழும்பில் அமைந்துள்ள ஊhயவாயஅ இன் விற்பனையகம் சிறந்த சொப்பிங் அனுபவத்தை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மட்டுமே குறிப்பிட்ட கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X