Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 19 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சார கட்டமைப்புகளுக்கான வயர்களை பதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான வழிகாட்டல் செயற்திட்டமான களனி விசுர சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தை களனி கேபிள்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது.
அண்மையில் இரு பயிற்சிப்பட்டறைகள் அநுராதபுர மாவட்டத்தின் கெப்பட்டிகொல்லாவ மற்றும் மாத்தளை மாவட்டத்தின் தம்புளை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பங்குபற்றியிருந்தவர்களுக்கு இலத்திரனியல் கட்டமைப்புகளுக்கான வயர்களை நவீன முறைப்படி எவ்வாறு பதிவது என்பது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக 'களனி விசுர' திட்டம் களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலமாக தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலத்திரனியல் பொறியியலாளர்களின் சமூக நலன்புரி சேவையாக இது அமைந்துள்ளது. நாடு முழுவதும் பரந்து காணப்படும் இலத்திரனியலாளர்களுக்கு துறையில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி விளக்கங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய 'களனி விசுர' பயிற்சிப்பட்டறைகள் தம்புளை லிஹினி ஹோட்டல் மற்றும் கெப்பட்டிகொல்லாவ அம்பசெவன ஹோட்டல் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வுகளை களனி கேபிள்ஸ் பிஎல்சியின் விற்பனை பொறியியலாளர் சஞ்சீவ குணதிலக ஏற்பாடு செய்திருந்தார். இரு நிகழ்வுகளிலும் 200க்கும் அதிகமான பிரதேச இலத்திரனியல் பொறியியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றுக்கான தரம் உத்தரவாதமளிக்கப்பட்ட வயர்களை தெரிவு செய்வது, தூரத்தை கவனத்தில் கொண்டு இல்லங்கள் மற்றும் கட்டடங்களில் ப்ளக் பொயின்ட்களையும் சுவிட்ச்களையும் பொருத்துதல், விளக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து வயர்களை தெரிவு செய்தல், முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பில் கவனம் செலுத்தல் மற்றும் வயர்களை பதிதல் பற்றிய விடயங்கள் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறைகளில் பங்குபற்றியவர்களுக்கு உணவு வேளைகள் மற்றும் பான வகைகள் போன்றன வழங்கப்பட்டிருந்ததுடன், பங்குபற்றுநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கலுடன் நிறைவடைந்திருந்தன.
'களனி விசுர' திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் வீடுகள் அல்லது கட்டடங்களுக்கு அவசியமான வயர்களை பதிதல் தொடர்பிலான அறிவை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், இதன் மூலமாக போட்டிகரத்தன்மை வாய்ந்த சூழலில் பங்குபற்றிய இலத்திரனியலாளர்களுக்கு மின்கட்டமைப்புகளை பொருத்தும் ஆளுமை சேர்க்கப்படும்.
நாடு முழுவதையும் சேர்ந்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் முன்னணி பயிற்சிப்பட்டறையாக 'களனி விசுர' அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மொத்தமாக 16,000 இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
களனி கேபிள்ஸ் பிஎல்சி வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'உலகத்தரம் வாய்ந்த இலத்திரனியல் பொறியியலாளர்களை கட்டியெழுப்புவதற்கான ஒரு முதலீடாக 'களனி விசுர' சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தை களனி கேபிள்ஸ் பிஎல்சி கருதுகிறது. சந்தையில் களனி கேபிள்ஸ் பிஎல்சி மூலமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த உயர்ந்த வர்த்தக நாமங்கள் மத்தியில் களனி வயர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பல வருடங்களாக, சந்தையில் முதலிடத்தை இந்த தயாரிப்புகள் வகிக்கின்றன' என்றார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'களனி விசுர பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுக்க நாம் அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களை தெரிவு செய்திருந்தோம், ஏனெனில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் இலத்திரனியல் வயர்களை பதிதல் தொடர்பில் மேலதிக அறிவை பெற்றுக் கொள்வதற்கு அதிகளவு ஆர்வம் காணப்பட்டது. எனவே, நாம் அவர்களின் வாழ்வில் ஆளுமை படைத்த இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களாக திகழ்வதற்கு ஒரு பங்களிப்பை இதன் மூலம் ஏற்படுத்தியுள்ளோம். களனி விசுர என்பது அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அறிவை பெற்றுக் கொடுக்கும் பிரத்தியேகமான திட்டமாக அமைந்துள்ளது. இந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதையிட்டு நாம் நிறுவனம் எனும் வகையில் பெருமையடைகிறோம்' என்றார்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் வயர்களை உற்பத்தி செய்து வரும் நூறு சதவீதம் இலங்கையின் உரிமையாண்மையைப் பெற்ற கம்பனியாக களனி கேபிள்ஸ் பிஎல்சி திகழ்கிறது.
கம்பனி களனி விசுர பயிற்சிப்பட்டறைகளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை: மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுத்திருந்தது. மேலும் நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி சுப்பர் பிரான்ட் நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5ளு விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago