Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூலை 21 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலையானது, லப்பரொஸ்கொபி செயன்முறைகள் தொடர்பான நேரடி சத்திரசிகிச்சை பயிற்சிப் பட்டறை ஒன்றை அண்மையில் வெற்றிகரமாக நடாத்தியது. அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 25 இற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள மிக முன்னேற்றகரமான வசதிகளை கொண்ட அதிநவீன சத்திரசிகிச்சை கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்கு சத்திர சிகிச்சைகளை உள்ளடக்கியதாக லப்பரொஸ்கொப்பி பயிற்சிப்பட்டறை (TEP, TAPP மற்றும் fundoplication) நடாத்தப்பட்டதுடன், அது அழைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் பார்க்கும் விதத்தில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்திற்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த நிபுணர்கள் பயிற்சிப் பட்டறையில் மாத்திரம் கலந்து கொள்ளவில்லை, மாறாக சத்திரசிகிச்சை கூடத்திற்குள்ளே இடம்பெற்றுக் கொண்டிருந்த செயன்முறைகளிலும்; அவ்வப்போது பங்கெடுத்தனர்.
இடைத்தொடர்புபட்ட இந்த அமர்வு, விரிவுரைகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடத்திலான சில செயன்முறைகள் ஆகியவை பயிற்சிப் பட்டறை பணிப்பாளரான டாக்டர். றோய் பட்டன்கார் அவர்களினால், ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலையின் அனுபவமுள்ள வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சிப் பட்டறையை தொடர்ந்து, கற்றலை பலப்படுத்துவதை நோக்காகக் கொண்ட ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஹேர்ணியா (குடலிறக்க நோய்) சத்திரசிகிச்சையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய விடயத்தையும் நிகழ்ச்சிநிரல் உள்ளடக்கி இருந்ததுடன், திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இப் பயிற்சிப் பட்டறையானது, அறிவை பகிர்தல் மற்றும் பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்வதற்கான நல்லதொரு முன்னுதாரணம் என்பதை நிரூபித்த அதேவேளை, இதில் பங்குபற்றிய அனைவருக்கும் மிகச் சிறந்த பயனையும் அளித்தது.
'10-15 சென்ரிமீற்றர் நீளமான கீறல்களைக் கொண்ட திறந்த முறையிலான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் அந்த நாட்களில் இருந்து, ஒரு சில துளைகள் மட்டுமே கொண்ட செயன்முறைகளை உள்ளடக்கியதாக லப்பரொஸ்கொபி சத்திர சிகிச்சையானது இன்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் வலைத் துணி (மெஸ்) கூட நூல், பட்டு மற்றும் நைலோன் என படிப்படியாக மாற்றமடைந்து இன்று பொலிபுரொபலீனாக மாற்றமடைந்து இருக்கின்றது. லப்பரொஸ்கொபி சத்திரசிகிச்சையை பொறுத்தமட்டில் அதன் பிரதிபலன் மற்றும் நோயாளியின்; நலம் என்பன கண்ணுக்கு புலப்படக்கூடிய விளைவை கொண்டிருக்கின்றன. லப்பரொஸ்கொபி ஹேர்ணியா சத்திரசிகிச்சை நிபுணர்களின் கற்றல் வழிமுறையை காட்டும் வளையியானது தொடர்ச்சியானதும் அதேநேரம் TEP மற்றும் TAPP போன்ற மிகப் பிரபலமாகி வரும் நுட்பங்களை உள்வாங்கி உடனடியாக ஒத்திசைந்து செயற்பட வேண்டியதுமாகும்' என்று பயிற்சிப் பட்டறை பணிப்பாளர் டாக்டர் றோய் பட்டன்கார் தெரிவித்தார்.
மும்பாயிலுள்ள செத் ஜீ.எஸ். மருத்துவ கல்லூரியின் ஒரு பட்டதாரியான டாக்டர். றோய் பட்டன்கார் FRCS (Glasgow), FRCS (Ed), லப்பரொஸ்கொபி சிகிச்சையில் பல்கலைக்கழக டிப்ளோமா (ஸ்ட்ராஸ்பேர்க்) மற்றும் இரப்பை குடலியல் (gastroenterology) துறையில் PhD (UK) போன்ற பல பட்டப்படிப்புக்களையும் பூர்த்தி செய்தவராவார்.
இந்த பயிற்சிப் பட்டறையின் பிரமாண்டமான வெற்றி தொடர்பாக பிரவுண்ஸ் வைத்தியசாலைகள் / சுகாதார பராமரிப்பு பிரிவு பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியான டாக்டர். சஜீவ நாரங்கொட கருத்துத் தெரிவிக்கையில், 'டாக்டர். றோய் பட்டன்காரின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்த பயிற்சிப் பட்டறையானது சத்திரசிகிச்சை துறையில் மிகவும் சிறப்புத்துவம் வாய்ந்த நிலையை அடைந்து கொள்வதற்கான எமது வைத்தியசாலையின் பயணத்தில் நிச்சயமாக சரியானதொரு திசையில் எடுத்து வைக்கப்பட்ட ஒரு காலடியாக அமைந்துள்ளது' என்றார். அவர் மேலும் கூறுகையில், 'சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர். சுமுது குமாரகே மற்றும் இலங்கை சத்திரசிகிச்சை நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும் இரப்பை குடலியல் மருத்துவத்துறை நிபுணருமான பேராசிரியர் கெமல் டீன் போன்றோர் இந்த பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக இடம்பெறும் பொருட்டு வழங்கிய தாராளமான பங்களிப்பிற்கு நாம் மிகவும் நன்றி கூறுகின்றோம்' என்று குறிப்பிட்டார்.
70 படுக்கைகளுடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இவ்வருடத்தின் முற்பகுதியில் திறந்து வைக்கப்பட்ட பல்-சிறப்பம்சங்கள் கொண்ட ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலையானது, மருத்துவ நோய் கண்டறிதல் துறையில் காணப்படுகின்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அவ்வாறான வசதிகளுள் நவீன CT மற்றும் MRI ஸ்கேனிங் வசதி, முன்னேற்றகரமாக மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பம் போன்றவையும் உள்ளடங்குகின்றன.
பிரவுண் அன்ட் கம்பனி பி.எல்.சி. நிறுவனத்தின் ஒரு புதிய தொழில்முயற்சியான பல்-சிறப்பம்சங்கள் கொண்ட இவ் வைத்தியசாலையானது - பரந்தளவான, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ நடைமுறை மற்றும் தனிப்பட்ட கவனிப்பு ஆகியவற்றின் ஊடாக உயர் தரமிக்க கவனிப்பு சேவையை ஒவ்வொரு நோயாளருக்கும் வழங்குவதை நோக்காகக் கொண்டியங்கும் 'இரண்டாம்நிலை கவனிப்பு' வைத்தியசாலைகள் மற்றும் நோய்கண்டறிதல் நிலையங்களின் சங்கிலித்தொடரில் முதலாவது இடத்தை பிடிக்கின்றது.
அனைத்து நோய் பிரிவுகளிலும் உயர் தகைமைகளைக் கொண்ட, அங்கீகரிக்கப்பட்ட வருகைதரு வைத்திய நிபுணர்கள் மற்றும் உள்ளக வைத்தியர்களை உள்ளடக்கிய உயர்மட்ட மருத்தவ அணியினரை ராகமை பிரவுண்ஸ் வைத்தியசாலை கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி மிகவும் அனுபவம் பெற்ற தாதியர்களின் சேவையும் இங்கு கிடைக்கின்றது. அரச மற்றும் தனியார் மருத்துவ துறைகளில் இருந்து வந்து இணைந்து கொண்ட தகுதியுள்ள தாதியர்களால் பிரவுண்ஸ் வைத்தியசாலையின் தாதியர் பராமரிப்பு சேவை பலப்படுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago