2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஜனசக்தி வலுவூட்டும் 'Future of our Children' திட்டம்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள மாணவர்களை 'எமது பிள்ளைகளின் எதிர்காலம்' (Future of our Children) எனும் திட்டத்தினூடாக வலுவூட்ட முன்வந்துள்ளது. கல்வி அமைச்சின் தரவுகளுக்கமைய, ஆண்டுதோறும் சுமார் 300,000 மாணவர்கள் இப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதற்கமைய ஜனசக்தி நிறுவனம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் குருநாகல் மற்றும் கம்பஹா நகரங்களில் இலவச செயலமர்வுகளை முன்னெடுக்கவுள்ளது. கல்வி அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் குறித்த பிரதேசங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இப் பரீட்சையில் தோற்றுவதாக சுட்டிக்காட்டப்பட்டமையால் இப் பிரதேசங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த செயலமர்வுகளின் போது புகழ்பெற்ற விரிவுரையாளரான பரத் லங்கா அவர்கள் மூலம் மாணவர்கள் சிறப்பாக பரீட்சையை எதிர்கொள்வதற்கான முக்கிய தேர்வு உதவி குறிப்புகள் வழங்கப்படவுள்ளன. கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் சாத்தியமான கேள்விகளும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த செயலமர்வில் பங்குபற்றிய மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெறும் மாணவர்கள் ஜனசக்தி காப்புறுதியின் விசேட புலமைப்பரிசிலினை பெறவுள்ளனர். கூப்பன் வழியாக மாணவர்கள் அனுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் நுழைவு அனுமதி வழங்கப்படும்.

'ஜனசக்தி நிறுவனமானது இலங்கையின் திறமைமிக்க இளைஞர்களை குறிப்பாக கிராமிய மெய்வல்லுநர்களை தமது முதன்மை அனுசரணை திட்டத்தின் ஊடாக தொடர்ச்சியாக வலுவூட்டி வருகிறது. ஒருநாள் தொழிலாளர் படையில் சேரவுள்ள திறமையான குழந்தைகளை உருவாக்குவதற்கான உதவிகளை வழங்குவதனூடாக இந் நாட்டிற்கு பங்களிப்பு செய்ய வேண்டியது எமது கடமை என நாம் கருதுகிறோம்' என ஜனசக்தி ஆயுள் காப்புறுதியின்;(விற்பனை மற்றும் செயல்பாடுகள்) பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீரவர்தன தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பங்குகொள்ளும் மாணவர்களின் பெற்றோருக்கு, அவர்களுக்கென விசேடமாக உருவாக்கப்பட்ட செயலமர்வில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

'தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது பல இளம் மாணவர்களுக்கு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த பரீட்சையில் சிறப்பாக முகம் கொடுப்பதற்குத் தேவையான கருவிகளை மாணவர்களுக்கு அளித்து அவர்களுக்கு மன நிம்மதி அளிப்பதே ஜனசக்தியின் குறிக்கோளாக அமைந்துள்ளது. இந்த செயலமர்வில் மன அழுத்தத்தை கையாளும் விதம் மற்றும் குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்கும் விதம் குறித்த தலைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன' என ஆயுள் வர்த்தகநாம முகாமையாளர் ஜுட் சில்வா தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனத்தின் ஷில்ப சக்தி கொள்கையுடன் அதன் விரிவான உற்பத்தி தொகுப்பானது குழந்தைகளின் கல்விக்காக விரிவாக்கப்பட்டுள்ளது. ஷில்ப சக்தி திட்டமானது இரண்டாம் நிலை கல்வி மற்றும் பல்கலைக்கழக ஆண்டு கல்வி என ஒரே தொகுப்பில் இரண்டு நிதியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காப்புறுதி கொள்கையானது மாணவர்கள் மன அழுத்தமின்றி தமது கல்வியை மேம்படுத்திக் கொள்ள வழிவகுக்கிறது. இந்த திட்டத்தினை காப்புறுதிதாரர் தேர்ந்தெடுப்பின் வைத்தியசாலை காப்பீடு வரை நீடித்துக் கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X