2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விற்பனை குழுவினரின் பலத்தை விஸ்தரிக்கும் ஜனசக்தி

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் அதன் கிளை நடவடிக்கைகளை 12 பிராந்தியங்களில் விஸ்தரித்துள்ளது. ஜனசக்தி நிறுவனம் சுமார் ஓராண்டிற்கு முன்னர் ஒரு முக்கிய ஸ்தானத்தில் அதன் ஆயுள் நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்தது. 

'எமது ஆயுள் விற்பனை குழுவினரின் தொடர்ச்சியான தொழில்சார் விருத்திக்கான ஆண்டாக இது அமைந்திருந்தது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு அவர்கள் தமது திறன்களை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த விற்பனை குழு பிரதிநிதிகள் நாடுமுழுவதும் எமது பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது திறன்களை பயன்படுத்துவர் என நாம் நம்புகின்றோம்' என ஆயுள் விற்பனை(கூட்டாண்மை விற்பனை மற்றும் மூலோபாய தொடர்பு அபிவிருத்தி) பிரிவின் உதவி பொது முகாமையாளர் நிலங்க கருணாரத்ன தெரிவித்தார்.

இந் நிலையத்தில் விற்பனை ஊழியர்களின் செயற்பாடுகளை மேம்படுத்தல் எனும் நீண்டகால குறிக்கோளுடன் பணிக்கமர்த்தப்படும் ஊழியர்களுக்கு விரிவான பயிற்சிகள் மற்றும் அபிவிருத்திகள் வழங்கப்படுகின்றன. தொழில் ரீதியாக உருவாக்கப்பட்ட இந்த ஊழியர்கள் தற்போது மேல்மாகாணம் முழுவதுமுள்ள 12 முக்கிய இடங்களில் பதவிகளை வகித்து வருகின்றனர். இதில் கந்தானை, நீர்கொழும்பு, வத்தளை, கம்பளை, அவிசாவளை, மினுவங்கொட, ஹேமாகம, தெஹிவளை, நுகேகொட, பத்தரமுல்ல, அத்துருகிரிய மற்றும் புறக்கோட்டை போன்ற பிரதேசங்கள் உள்ளடங்குகின்றன.

'ஆயுள் காப்புறுதி நிலையத்தின் முதலாவது ஆண்டு நிறைவு கடந்த ஜுன் மாதம் 3ஆம் திகதி பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆயுள் நிலையத்தைச் சேர்ந்த விற்பனை குழுவினருக்கு நாம் பயிற்சி அளித்திருந்ததுடன், தற்போது அவர்கள் மேலதிக பொறுப்புக்களையும் பொறுப்பேற்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றனர். மிக முக்கிய பிரிவுகளில் அவர்களை பயன்படுத்த நாம் தீர்மானித்ததுடன், இதனூடாக ஜனசக்தி வளர்ச்சியுடன் இணைந்து அவர்கள் தம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும்' என ஆயுள்(விற்பனை மற்றும் செயற்பாடுகள்) பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீரவர்தன தெரிவித்தார்.

தமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் தற்போது 110 இற்கும் மேற்பட்ட கிளைகளில் ஜனசக்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந் நிறுவனம் ஜனசக்தி லைஃவ்சேவர், விசேட ஓய்வூதிய திட்டம், ஜனசக்தி லைஃவ் அன்லிமிடட், வாழ்நாள் மருத்துவமனை, இயற்கை மரணம் மற்றும் விபத்துக்களின் போது 20 வருட ப்ரீமியம் செலுத்தக்கூடிய விரிவான ஆயுள் காப்புறுதி கொள்கை திட்டம், வாடிக்கையாளர்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஜனசக்தி ஃபேமிலி ப்ளஸ் போன்ற பல்வேறு காப்புறுதி திட்டங்களை அறிமுகப்படுத்தி இத்துறையில் புத்துருவாக்குநராக தொடர்ந்து விளங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X