Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுடாவே ரேடிங் நிறுவனமானது கொரியாவின் SJE கோப்பரேஷன் உடன் இணைந்து உள்நாட்டு சந்தையில் 'ஒப்ரிமா' (Optima) தொடரிலான நீராவி தூய்மையாக்கல் இயந்திரங்களை அண்மையில் அறிமுகம் செய்ததன் மூலம், இலங்கையின் தூய்மையாக்கல் துறையில் பசுமைப் புரட்சி ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளது.
கொரிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மேன்மைதங்கிய வொன்-சாம் சங்க் அவர்களின் பிரசன்னத்துடன் பிரமாண்டமான அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. கொரியாவின் SJE கோப்பரேஷன் வணிக அபிவிருத்தி முகாமையாளர் திரு. டொம் கிம் மற்றும் டுடாவே ரேடிங் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு. வசந்த டுடாவே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
புதிதாக அறிமுகமாகியுள்ள 'ஒப்ரிமா ஸ்ரீமர்' தூய்மையாக்கல் இயந்திரங்கள் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் இரசாயனங்கள், சவர்க்காரங்கள் மற்றும் சலவைத்தூள் போன்றவற்றிலிருந்தும் முற்றுமுழுதாக அப்பாற்பட்டு தொழிற்படுகின்றன. வேகமாக விளாசப்படும் நீராவி மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் செயலாற்றல்மிக்க கலவையே, தூய்மையாக்கும் நீராவி முறைமையின் இரகசியமாகும்.
நீராவி தூய்மையாக்கல் முறைமையிலுள்ள பெருமளவிலான அனுகூலங்களின் அடிப்படையில் முதன்மை ஸ்தானத்தை பெற்றுள்ள இந்த 'ஒப்ரிமா' நீராவி தூய்மையாக்கல் இயந்திரங்கள், 99.9% பக்றீரியாவை அகற்றுவதுடன் 100% கிருமியற்ற சுத்தமாக்கப்பட்ட மேற்பரப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கின்றது.
சென்றடைவதற்கு சிரமமான இடங்களையும் தூய்மைப்படுத்துவதற்கு நீராவி இடமளிக்கின்றது. அதனால் இரசாயன பதார்த்தங்கள் எதுவுமின்றி மிகவும் முற்றுமுழுதாகவும் பூரணமாகவும் தூய்மைப்படுத்துகின்றது! எளிதில் களராத அழுக்கு, எண்ணெய்ப்பசை மற்றும் கறைகளை அகற்றுவதற்கு நீராவிச் சக்தி மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் கலவையே போதுமானதாகும். நபர் ஒருவர் கடுமையான கறைகளை அகற்றும் பொருட்டு, நீராவியில் ஈரப்பதமான உள்ளடக்கங்களை அதிரிக்கச் செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது. உண்மையில், ஒரேயொரு லீற்றர் குழாய் நீரானது 1,700 லீற்றர் நீராவியை உருவாக்குவதற்கு போதுமானது. இவ்வசதி, நீரைச் சேமிக்கின்ற அதேநேரம் கைத்தொழில்துறை தொழிற்சாலைகளின் செலவையும் கணிசமாக குறைப்பதற்கு வழிவகுக்கின்றது.
புதிய 'ஒப்ரிமா' நீராவி முறை தூய்மையாக்கல் இயந்திரம் ஐந்து வேறுபட்ட சூடேற்றல் கொள்ளளவுகளில் சந்தைக்கு வந்துள்ளது. 05KW, 12Kw, 18KW, 27KW மற்றும் 36KW ஆகிய கொள்ளளவுகளில் இது கிடைப்பதுடன் இவையனைத்தும் முற்றுமுழுதாக மின்சாரத்தில் இயங்கும் தன்மை கொண்டதாகும். அதுமாத்திரமன்றி, வெளிப்புற பயன்பாட்டுக்கான ஒரு தெரிவும் இதில் காணப்படுவதுடன் டீசல் மற்றும் மின்சாரத்தில் (மின்சாரத்தில் இயங்கும் ஒரு 24KW இயந்திரத்திற்கு சமமானதாக) இது இயங்குகின்றது. அதாவது டீசலினால் சக்தியளிக்கப்பட்ட இந்த நீராவி கொதிகலன் ஆனது டீசல் எரிபொருளினால் இயக்கப்படுகின்றது. முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வகையைப் பொறுத்தவரை, ஒருவர் தனது பிரயோகத்தை பொறுத்து பொருத்தமான இணைப்பு முறைமையினை தெரிவு செய்து கொள்ள முடியும். அதேவேளை, 18KW இற்கு மேற்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரேநேரத்திலான இரு தூய்மையாக்கல் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இது பெறுமதியான நேரத்தையும் வேகத்தையும் சேமிக்கின்றது.
செயற்றிறன் மற்றும் நுண்ணுயிரற்ற தன்மை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள நீராவி முறை தூய்மையாக்கலானது – விஷேடமாக வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ வசதி மையங்கள், மதுவடிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் அனைத்து பண்ணைகள், தங்குவிடுதிகள், ஹோட்டல்கள் உணவகங்கள் உள்ளடங்கலாக உணவு மற்றும் குடிபான தொழிற்துறைகள், அனைத்து வகையான இயந்திரங்கள், வாகன பழுதுபார்த்தல் சேவை நிலையங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த வாகன துறை போன்றவற்றுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படும். இதற்கு மேலதிகமாக பூங்காக்கள், பொழுதுபோக்கு உபகரணங்கள், மோட்டார் சைக்கிள்கள், படகுகள், கொல்ஃப் காhட்ஸ், சிறியரக விமானங்கள், ரயில் பயணிகள் பெட்டிகள் அத்துடன் முழுமையாக தூய்மையாக்க வேண்டியிருக்கின்ற அனைத்து உட்புற அல்லது வெளிப்புற பகுதிகளுக்காகவும் இதனை பயன்படுத்த முடியும்.
இந்நிகழ்வில் டுடாவே ரேடிங் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான திரு. வசந்த டுடாவே உரையாற்றுகையில், 'இந்த ஒப்ரிமா ஸ்ரீமர் வகைகள் 100% சூழல்நட்புறவு மிக்கது என்ற அடிப்படையில் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கின்றது. இலகுவாக, உயிரியல் ரீதியாக தூய்மைப்படுத்துகின்ற அதேநேரம் சூழல்நட்புறவு கொண்ட நீராவி முறைமையிலமைந்த தூய்மையாக்கலானது – துப்புரவாக்குவதற்கு மிகவும் இயற்கையான ஒரு வழிமுறையாகும். அதுமட்டுமன்றி, வழக்கமான தூய்மையாக்கல் முறைமைகளுக்கு மிகப் பொருத்தமான ஒரு மாற்றீடாகவும் அமைகின்றது. இது உண்மையிலேயே எந்த விதத்திலான தூய்மையாக்கலுக்கும் பொருத்தமானதும், அதிநவீன புத்தாக்க தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதுமான ஒரு பூகோள நட்புறவுமிக்க பசுமை தீர்வாக காணப்படுகின்றது' என்றார்.
SJE கோப்பரேஷன் நிறுவனத்தின் வணிக அபிவிருத்தி முகாமையாளர் திரு. டொம் கிம் கூறுகையில், '1991ஆம் ஆண்டிலிருந்து தூய்மையாக்கல் உபகரணங்களை உற்பத்தி செய்த பல வருடகால நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு என்பவற்றைப் பயன்படுத்தி நாம் இந்த ஒப்ரிமா ஸ்ரீமரை வடிவமைத்திருக்கின்றோம். ஒப்ரிமா ஸ்ரீமரில் காணப்படும் பயன்படுத்துனர் நட்புறவான பிரயோக மென்பொருட்கள், நீரை சேமிக்கும் வடிவமைப்பு மற்றும் உயர் தராதரம் ஆகியன – உலகெங்குமுள்ள 70 இற்கு மேற்பட்ட நாடுகளின் வாடிக்கையாளர்கள் நீராவி முறைமை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்தல் மூலம் அனுகூலங்களை பெற்றுக் கொள்வதை சாத்தியமாக்கியுள்ளது' என்றார்.
நீராவி தூய்மையாக்கல் ஆனது சலவைப் பொருட்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுவதுடன், செறிதாக்கப்பட்ட நீராவியானது ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய மிச்சம்மீதியை விட்டுச் செல்வதில்லை என்பதாலும் இம்முறைமையானது ஆரோக்கியமானதாக இருக்கின்றது. தவறான சுத்தப்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்பட்ட விபத்துக்கள், தோல் அரிப்புக்கள் அல்லது வேறு ஏதேனும் பாதகமான சுகாதார விளைவுகள் இனிமேல் ஒரு பிரச்சினையாக இருக்காது. நீராவி முறையிலமைந்த புதிய இயந்திரங்கள் இப்பிரச்சினையை போக்குகின்றது. அதேவேளை அமுக்க அடிப்படையிலான சலவை இயந்திரங்களைப் போன்று கழிவுகளை வெளியிடுவதையும் நீராவி தூய்மையாக்கல் தவிர்க்கின்றது. நீராவியானது தூசுகளை ஒன்றாகதிரட்டி கெட்டியாக்குவதால் ஒவ்வாமையை ஏற்படுத்தவல்ல துகள்கள் காற்றில் பரவாது. இதனால், தூசு ஒவ்வாமையில் சிக்கித்தவிக்கின்ற நபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது.
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago