Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனை துறைசார் நிபுணர்கள் நான்கு பேர் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தேசிய விற்பனை காங்கிரஸ் (NASCO) வைபவத்தில் ஐந்து விருதுகளை வென்றுள்ளனர். அதன் மூலம் இந்த கீர்த்திமிக்க வருடாந்த நிகழ்வில் நாட்டின் ஆயுள் காப்புறுதித் துறை தலைவர்கள் பெரும் கௌரவத்தை ஈட்டியுள்ளனர்.
இவர்களுள் மிகச் சிறந்த பெறுபேறைப் பெற்றவர் நதீக ஜயமாலி ஆவார். ஆயுள் காப்புறுதி விற்பனை நிறைவேற்றுத் துறை பிரிவில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தோடு இந்த ஆண்டின் மிகச் சிறந்த பெண் விற்பனைப் பிரமுகர் என்ற விருதையும் அவர் வென்றுள்ளார். முன்னிலை (Frontliner), விற்பனை நிறைவேற்று (Sales Executive) தரம் மற்றும் இடைநிலை முகாமைத்துவம் (Territory Manager) என மூன்று பிரிவுகளில் பெண்களுக்காக வழங்கப்பட்ட ஒரே விருது இதுவாகும்.
கோப்பரேட் சேல்ஸ் விற்பனை பிரிவைச் சேர்ந்த திருமதி ஆர்.எஸ்.பனாகொட, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னிலை பிரிவில் வெள்ளி விருது, டபிள்யூ.எஸ்.ஆர்.பெர்ணான்டோ இடைநிலை முகாமைத்துவப் பிரிவில் வெள்ளி விருது, ஆர்.பி.எதிரிசிங்க விற்பனை நிறைவேற்று பிரிவில் வெண்கல விருது என்பனவற்றைப் பெற்றுக் கொண்டனர்.
'விற்பனை அதிகாரிகள் மத்தியில் தொழிற்சார் பண்புகளை ஊக்குவிப்பது தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கான வசதிகளை வழங்குவது, என்பன செலிங்கோ லைஃப் கம்பனி உருவாக்கப்பட்டது முதலே அதன் அடிப்படை கொள்கைகளாக இருந்து வருகின்றன. இந்த அதிகாரிகளின் வெற்றிகள் குறித்து நாம் பெருமை அடைகின்றோம்'என்று கூறினார் செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் 'சிறந்த விற்பனை கோட்பாடுகளை பின்பற்றுவதில் நாம் காட்டும் முக்கியத்துவத்தை இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கம்பனியில் உள்ள ஏனைய அதிகாரிகளும் இத்தகைய அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ள இது தூண்டுதலாக அமையும்' என்று அவர் மேலும் கூறினார்.
ஊடகம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்திகள் மற்றும் சேவைகள், காப்புறுதி, நிதித்துறை உற்பத்திகள் மற்றும் சேவைகள், தொலைத்தொடர்பு, உல்லாசப் பயண மற்றும் விடுமுறை சேவைகள், நவநாகரிகம் மற்றும் ஆடை வடிவமைப்பு, நுகர்வோர் பாவனைப் பொருள்கள், உணவு மதுபானம் மற்றும் புகையிலை பிரிவு என பல்வேறு பிரிவுகளில் முன்னிலை, நிறைவேற்று விற்பனை பிரிவு மற்றும் இடைநிலை முகாமத்துவம் என சிறந்த செயற்பாடுகளுக்குரிய தொழிற்சார் நிபுணர்கள் தெரிவு செய்யப்பட்டு வருடாந்தம் NASCO விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கான தெரிவுகளை நடத்தும் நடுவர்கள் குழாம் முன்னிலையில் இவர்கள் நேர்காணல் ஒன்றுக்காக தோற்றிய பின்பே தெரிவுகள் இடம்பெறுகின்றன.
2004 முதல் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைஃப் இந்தத் துறையில் நாட்டில் மிகப் பெரிய கிளை வலையமைப்பையும் கொண்டுள்ளது. நாட்டின் சகல மாவட்டங்களிலும் கூமார் ஐயாயிரம் பேர் கொண்ட விற்பனைப் படையும் அதற்கு உண்டு.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago