.JPG)
இலங்கையின் பொருளாதாரத்தில் தனது உயர் தர மென்பொருள் வடிவமைப்பு மற்றும் பொறியியல் சேவைகளின் மூலமாக குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கி வரும் 99X Technology, அண்மையில் இடம்பெற்ற தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் வியாபார மற்றும் நிபுணத்துவ சேவைகள் ஏற்றுமதி பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது.
கம்பனியின் சிறப்புத் தேர்ச்சி வாய்ந்த பயணத்துக்கு இது சிறந்த ஊக்குவிப்பாக அமைந்துள்ளதுடன், பெறுமதி சேர்க்கப்பட்ட மென்பொருள் தயாரிப்புகள் குறிப்பாக ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய சந்தையை பொறுத்தமட்டில், 99X Technology என்பது 150க்கும் மேற்பட்ட சிறந்த உயர் தர வௌ;வேறான தொழில்நுட்ப முறைமைகளை கொண்டு தீர்வுகளை வடிவமைத்துள்ளது.
இலங்கை நிறுவனம் எனும் வகையில், சர்வதேச மென்பொருள் துறையில் எமது பிரசன்னம் தொடர்பில் நாம் மிகவும் பெருமையடைகிறோம். இந்த மட்டத்திலான கௌரவிப்பு என்பது எமது பங்களிப்புக்கு சிறந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக நாட்டின் ஏற்றுமதி வருமானத்துக்கு வழங்கும் பங்களிப்பு மற்றும் புத்தமைவான எமது அணியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு கிடைத்த கௌரவிப்பாக அமைந்துள்ளது' என 99X Technology நிறுவனத்தின் இணை தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவித்தார்.
தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் வருடாந்த விருதுகள் வழங்கல் என்பதை பொறுத்தமட்டில், கம்பனி புதிதாக உள்வாங்கப்படவில்லை. 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் விருதுகள் வழங்கலின் போது வியாபார மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சேவைகள் ஏற்றுமதியில் தங்க விருதை வென்றிருந்ததுடன், தொடர்ச்சியாக மென்பொருள் தயாரிப்புகளின் ஏற்றுமதிச் சிறப்புக்காக பல்வேறு கௌரவிப்புகளை பெற்றுள்ளது.
தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வருடாந்த ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கல் என்பது, இலங்கையின் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பங்களிப்பை வழங்கும் ஒரே சம்மேளனமாக அமைந்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களின் கௌரவிக்கும் வகையில் இடம்பெறும் உயர்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
99X Technology என்பது மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் காணப்படும் சுயாதீன மென்பொருள் சேவை வழங்குநர்களுக்கு (ISVs) அவசியமான மென்பொருள் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ளதுடன், நோர்வே நாட்டின், ஒஸ்லோ நகரை மையமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், இதுவரையில் 150க்கும் மேற்பட்ட மென்பொருள் தீர்வுகளை வெற்றிகரமாக வடிவமைத்து வழங்கியுள்ளது. இலங்கையில் பணிபுரிய சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் Great Place To Work கல்வியகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.