2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

3M நடத்திய பிராந்திய விழிப்புணர்வு திட்டம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


3M லங்கா நிறுவனத்தின் தனிநபர் பாதுகாப்பு பிரிவானது, இலங்கை தொழில் திணைக்களத்தின் தொழிற்துறை பாதுகாப்பு பிரிவின் ஆதரவுடன் அண்மையில் பதுளை Heritage Resort இல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான முழுநாள் கருத்தரங்கு ஒன்றினை முன்னெடுத்திருந்தது. 3M ஆனது தமது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓர் அங்கமாக, பணியாளர்கள் மற்றும் ஊவா மாகாணத்தில் பெரியளவிலான உள்நாட்டு துறைகளில் முடிவெடுப்பவர்கள் மத்தியில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில்; இக் கருத்தரங்கினை முன்னெடுத்திருந்தது.
 
இந்த கருத்தரங்கில் தேயிலை, சீனி, பால், சுரங்கம், மர மற்றும் கட்டுமானம் மற்றும் அகழ்வு போன்ற துறைகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றிருந்தனர். மேலும் இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை நீர்பாசன திணைக்களம், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, ஊவா மாகாணக் கழகம் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பலர் பங்கேற்றிருந்ததுடன், காலத்தின் தேவையறிந்து விழிப்பூட்டிய 3ஆ இன் இந்த முயற்சியை பலரும் பாராட்டினர். இந் நிகழ்வில் உரையாற்றிய உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் பாதுகாப்பு முகாமையாளர் புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில், '3M மூலம் உள்நாட்டு சந்தையில் காணப்படுகின்ற உயர் தரத்திலான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த தெளிவூட்டல்களை பெற்றுக்கொண்டோம்' என்றார்.
 
இந் நிகழ்வில் பணியிட விபத்துக்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு மதிப்பீடுகள், பணியாளர் பொறுப்புகள், பணியிட பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய இறுதி முடிவெடுப்பவர்கள், தேசிய தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இந் நிகழ்வில் தொழில் திணைக்களத்தின் தொழிற்துறை பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தொழிற்சாலை ஆய்வு பொறியியலாளர் எஸ்.என்.பி.எம்.பத்மசிறி கருத்து தெரிவிக்கையில், 'பணியிடத்தில் ஏற்படும் விபத்துக்களிற்கு பணியாளர்களின் தவறான செயல்கள் மற்றும் சரியான தனிநபர் பாதுகாப்பு தயாரிப்புகளை பயன்படுத்தாமையே காரணமாகும். இலங்கையில் கட்டுமானத் தளங்களிலேயே அதிகளவான வேலைத்தள விபத்துக்கள் பதிவாகியுள்ளன' என்றார். தரமான தனிநபர் பாதுகாப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் ஆபத்தான பணியிட விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என கருத்தரங்கில் உரையாற்றிய 3M லங்கா நிறுவனத்தின் சேவை பொறியியலாளர் நிபுணர் ஷயன் அப்புஹாமி தெரிவித்தார். பணியிடத்தில் ஏற்படும் பணியாளர் விபத்துக்கள் நேரடியாக தொழிற்துறையையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிப்படையச் செய்கிறது. இலங்கையில் தற்போது தொழில்சார் பாதுகாப்பு வழிகாட்டல்களோ, தரமான தயாரிப்புகளோ இல்லை' என்றார்.
 
3M ஆனது நாடுமுழுவதும்; தொழில்சார் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள தொழில்துறை பிரிவுகள் மற்றும் கட்டுமான தளங்களில் இதுபோன்ற கருத்தரங்குகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ஷயான் தெரிவிக்கையில், 'தேயிலை, இறப்பர் மற்றும் சீனித் தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதால் இம்முறை இக் கருத்தரங்கினை ஊவா மாகாணத்தில் முன்னெடுக்க தீர்மானித்தோம். இந்த விழிப்புணர்வு திட்டத்தின் ஊடாக பணியாளர்களும், வேலை வழங்குநர்கள் இப் பிரச்சனையின் ஆழத்தை கண்டறிய உதவியாக அமையும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .