.JPG)
சர்வதேச வர்த்தகநாம காங்கிரஸ் மூலம் அண்மையில் சிங்கப்பூர் பான் பசுபிக் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட CMO ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது சிறந்த வர்த்தகநாமம் மற்றும் சந்தைப்படுத்தல் விருதினை வென்றுள்ளது. CDB நிறுவனமானது வங்கியியல், நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி போன்ற பிரிவுகளின் கீழ் இவ் விருதினை வென்றுள்ளது. CMO நிறுவனமானது அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆலோசனை பிராந்திய மன்றங்களை கொண்டுள்ளது.
'ஆசியாவின் மிகச்சிறந்த வர்த்தகநாமங்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து நாம் பெருமையடைகிறோம். இந்த விருதானது எமது வர்த்தகநாமத்தின் பலத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது' என CDB நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியுமான மல்கம் வீரசூரிய தெரிவித்தார்.
பரந்தளவிலான உலகளாவிய தொழிற்துறைகளைச் சார்ந்த சிரேஷ்ட கூட்டாண்மை சந்தைப்படுத்தல் தலைவர்கள் மற்றும் வர்த்தகநாம முடிவெடுப்பவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் தனிநபர் தொடர்பினை கட்டியெழுப்பி உயர் தரத்திலான தகவல் பரிமாற்றத்தை வழங்கும் ஒரேயொரு நிறைவேற்றுநர்களுக்கான உலகளாவிய வலையமைப்பே CMO மன்றமாகும். இந் நிகழ்வில் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் பொது உறவுகள் மற்றும் வர்த்தகநாம மூலோபாயங்களை குறிக்கும் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழு மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் இளங்கோவன் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், 'சர்வதேச வர்த்தகநாம காங்கிரஸ் (World Brand Congress) அமைப்பினால் வர்த்தகநாமத்திற்கான இந்த சர்வதேச விருதானது எமது வெற்றிகரமான சந்தைப்படுத்தல் உத்திகளையே பிரதிபலிக்கின்றது. நிதிச்சேவைகள் துறையில் CDB யின் சிறந்த வர்த்தகநாமத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளது' என்றார். மேலும் அவர், 'எமது வர்த்தகநாம உத்திகளின் முக்கிய அம்சங்களான சிறந்த நிர்வாகம், புத்தாக்கம் மற்றும் முக்கிய மேலாண்மை நடைமுறைகள் மற்றும் நாடுமுழுவதும் உள்ள 50 ஒன்-லைன் இணைப்பு கொண்ட நிலையங்கள் ஊடாக கடந்த 18 வருடங்களாக எமது தேசத்தின் மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம்' என தெரிவித்தார்.