Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 07 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
AIA இன்ஷுரன்ஸ் லங்காவின், புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நிகில் அத்வானி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கைக் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, 2019 ஜுலை முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவியில் தற்போதுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி, பங்கஜ் பெனர்ஜி AIA குழுமத்தில் கூட்டாண்மை விநியோகத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியாகத் தனது கடமையைப் பொறுப்பேற்கும் விதமாக ஹொங்கொங்குக்கு இடமாறுவார்.
தற்போது நிறுவனத்தில் வாடிக்கையாளர் மூலோபாயம், நிறுவன நிலைமாற்றம், சந்தைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை நிகில் வழிநடத்துகின்றார். இவருடைய தற்போதைய பதவியின் ஒரு பகுதியாக, காப்புறுதித் திட்டம், வாடிக்கையாளர் மேலாண்மை, வர்த்தக நாமம், தொடர்பாடல், தொலைக்காட்சி, டிஜிடல் சந்தைப்படுத்தல், பகுப்பாய்வு, பெருநிறுவனத் தீர்வுகள் ஆகியவற்றுக்கும் பொறுப்பாகவுள்ளார்.
மேலும், நிகில் 2016 இலிருந்தே AIA இன்ஷுரன்ஸ் லங்காவின் ஓர் அங்கமாக இருப்பதோடு, நிறுவனத்தின் புதிய ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டிருப்பதுடன், உடல்நல ஆரோக்கியச் சந்தையில் நிறுவனத்தின் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தியுமிருந்தார். AIA ஸ்ரீ லங்கா சார்பாக, இவரது சாதனைகளானது நிறுவனத்தின் வெற்றிகரமான வளர்ச்சியையும் நாட்டில் AIA Vitality திட்டத்தின் விரிவுபடுத்தல்கள், AIA வர்த்தக நாமத்தின் விழிப்புணர்வை கணிசமானளவு அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளின் நடைமுறைப்படுத்தல்களைக் கண்காணித்தல், இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை அதிகரித்தல் ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றது.
நிகில், தனது வர்த்தக இளமானிப் பட்டத்தை இந்தியாவின் மும்பை பல்கலைக்கழகத்திலும் வியாபார நிர்வாகப் பிரிவில் முதுமானிப் பட்டத்தை அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக்கழகத்திலும் பெற்றிருக்கின்றார்.
அத்துடன் காப்புறுதி, நிதியியல் துறையில் சுமார் 25 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள இவர், 2011 இலிருந்தே AIA குழுமத்தில் ஒருவராக இருந்து வருகின்றார். நிகில், AIA குழுமத்தில் இணைவதற்கு முன்னர், அமெரிக்காவின் ‘நியூயோர்க் லைஃவ்’, ‘ஜென்வோர்த் பினான்சியல்’ ‘ஜக்சன் நெசனல் லைஃவ்’, இந்தியாவின் ICICI புரூடென்சியல் அசட் ஆகிய நிறுவனங்களில் சிரேஷ்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
10 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago