2025 ஜூலை 21, திங்கட்கிழமை

AIA வெல்த் பிளானர்கள் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம்

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 இல் AIA இன்ஷுரன்ஸில் சிறப்பாக செயலாற்றியிருந்த 216 வெல்த் பிளானர்களுக்கு தமது வாழ்க்கைத் துணை,  பிள்ளைகளுடன் ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை AIA இன்ஷுரன்ஸ் வழங்கியிருந்தது.   

2017 ஆம் ஆண்டுக்கான AIA யின் சுப்ரீம் கிளப் வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு, ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவுக்கு ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் அங்கு மிகவும் பிரபலமான பகுதிகளான பூஜி மலை 5வது நிலையம், ஒடைபா ஒன்சென் வெந்நீரூற்றுக் குளியல், ஸ்பா, ஒடைபா வானவில் பாலம், டிஸ்னிலான்ட், அசாகுஸா கோவில், இம்பீரியல் அரண்மனைத் தோட்டம் உட்பட மேலும் பல இடங்களைப் பார்வையிட்டதுடன், சிலிர்ப்பூட்டும் சின்கான்சென் அனுபவத்தையும் இரசித்து மகிழ்ந்திருந்தனர்.  

AIA விற்பனை அணிக்காகத் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற வெகுமதித் திட்டத்துக்கான மற்றுமோர் உதாரணமாகவே, இந்த உற்சாகமான சுற்றுப்பயணம் அமைந்திருந்ததுடன், மேலும் இவ்வெகுமதித் திட்டமானது, வெல்த் பிளானர்களின் செயல்திறனுக்கு மதிப்பளித்து, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு வழங்குகின்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X