2025 ஜூலை 21, திங்கட்கிழமை

APRACA மாநாட்டுக்கு இலங்கை வங்கி அனுரசணை

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய பசுபிக் கிராம மற்றும் விவசாய கடன் சங்கங்களின் (APRACA) வலயக் கொள்கை மாநாட்டின் 70ஆவது நிறைவேற்றுக் கூட்டமும் (EXCOM) 21ஆவது பொதுக்கூட்டமும், இம்மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை, அங்கத்துவ வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்தப்பட்டது.   

“நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி நிதியியலும் இதில் உள்ளடங்காத மத்திய நிலைக்கான தீர்வுகள்” என்பதே, இவ்வருட நிறைவேற்றுக் குழுவின் தொனிப்பொருளாக இருந்தது.   

ஆசிய பசுபிக் வலயத்தின் வறிய கிராமிய நலன் மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி உட்பட வினைப்பயனை மேம்படுத்த உதவும் முகமாக, கிராமிய விவசாய நிதிக்கு உதவும் ஒரு நிறுவனமாக, 1977ஆம் ஆண்டு APRACA ஸ்தாபிக்கப்பட்டது.

அன்றிலிருந்து, கிராமிய நிதித்துறையில், அந்நியோன்னிய தகவல் பரிமாறும் வசதிகளும் ஒத்துழைப்பும் வழங்கி, தற்போது, ஆசிய பசுபிக் வலயத்திலேயே, 24 நாடுகளில், 83 நிறுவனங்களைக் கொண்டுள்ளது.   

APRACA அமைப்பின் உப தலைவரும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளருமான திரு. செனரத் பண்டார இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,  “இலங்கை அரசாங்கத்தின் நிறைபேறான பொருளாதார அபிவிருத்தித்திட்டத்துக்கு உயிரோட்டமிகு பங்களிப்பை வழங்குகின்றன இலங்கை வங்கி, சிறு, நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் முகமாக, நிதியியல் ஒத்துழைப்பை நித்தமும் வழங்குவதுடன், கிராமிய மற்றும் விவசாய துறைகளை இலக்காகக் கொண்டு, தனது நிதியியல் பங்களிப்பை வழங்குகின்றது. இத்தகையதொரு பின்னணியில், இந்த அனுரசணை வழங்க, கிடைத்தமையானது, சிறம்பம்சமாகக் கருதப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .