Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 06 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவு முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் பிராந்திய மட்டத்தில் முன்னோடியாக திகழும், OMAK டெக்னொலஜிஸ் ASEAN சந்தைகளில் ஆக்ரோஷமாக விரிவுபடுத்தும் வகையில் 85 மில்லியன் ரூபாய் முதலீடாகப் பெற்றுள்ளது. இந்த முதலீடுகளை BOV கெப்பிட்டல் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தரமுயர்த்தும் நோக்கத்துடன், முதலீடுகளை மேற்கொண்டு வரும் இலங்கை மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட வென்ச்சர் கெப்பிட்டல் நிறுவனமாக BOV கெப்பிட்டல் திகழ்கிறது.
OMAK டெக்னொலஜிஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி எஹாந்த சிறிசேன கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவு முதலீட்டைப் பெற்றுள்ள OMAK என்பது தெற்காசிய பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கவுள்ளது. சிங்கப்பூர் மற்றும் இலங்கையை அடிப்படையாகக் கொண்டியங்கும் BOV கெப்பிட்டல் எம்மீது நம்பிக்கையைக் கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். எமக்கு முதலீடுகளையும் ஆலோசனைகளையும் வழங்க முன்வந்துள்ளதுடன், பிராந்தியத்திலும் சர்வதேச ரீதியிலும் விஸ்தரிப்புகளை முன்னெடுப்பதற்கு, பங்களிப்புகளை வழங்க முன்வந்துள்ளது” என்றார்.
அத்துடன், முக்கியமாக BOV கெப்பிட்டலின் அர்ப்பணிப்பு என்பது, இலங்கையிலிருந்து இயங்கும் தொழில்நுட்ப அடிப்படையிலானத் தீர்வுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எனும் எதிர்பார்ப்பை OMAK டெக்னொலஜிஸ் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, BOV கெப்பிட்டலின் நோக்கம் என்பது, எப்போதும் சிறந்த சிந்தனையைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு வலுச்சேர்ப்பது என்பதாக அமைந்துள்ளதுடன், சிறந்த தொழில் முயற்சியாண்மை நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
கெப்பிட்டலின் பொது பங்காளரான பிரஜீத் பாலசுப்ரமணியம் கருத்துத் தெரிவிக்கையில், “ OMAK டெக்னொலஜிஸ் மற்றும் எஹந்த மற்றும் அவரின் அணியினர், மதிநுட்பமானவர்கள் என்பதுடன் அர்ப்பணிப்பானவர்கள். சிறந்த பெறுபேறுகளை எய்தும் வகையில் செயலாற்றி வருகின்றனர்.
இந்தோனேசியா போன்ற பாரிய சந்தைகளில் அவர்கள் பதிவு செய்துள்ள வெற்றியின் மூலமாக, அவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது பங்காளர்களான, எரிக் விக்ரமநாயக்க மற்றும் ராஜன் ஆனந்தன் ஆகியோருடன் நானும் இந்த வெற்றிகரமாக இயங்கும் நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
18 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago