Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 06 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நத்தார் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில் விற்பனை தொடரான Arpico தமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், இணைய வழி பொருள் கொள்வனவாளர்களுக்கு ஒரு மேலதிக சேவையாக நத்தார் தாத்தா வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று பொருள்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இணைய வழி வாடிக்கையாளர்களை மேலும் மகிழ்வூட்டும் வண்ணம் நத்தார் தாத்தா வேடம் அணிந்தவர்கள் அவர்களின் அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்று பொருள்களை விநியோகிக்வுள்ளனர்.
கிறிஸ்மஸ் தாத்தா மூலமான இந்த விநியோகத்துக்கு மேலதிகமாக மிக நியாயமான குறைந்த ஒரு தொகையே அறவிடப்படும். கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இந்தச் சேவை செல்லுபடியாகும்.
“ஒவ்வொரு வருடமும் எமது வாடிக்கையாளர்களின் பண்டிகைக் காலத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் நாம் புதுப்புது முறைகளைக் கையாளுகின்றோம். காரணம் Arpico என்பது ஒரே கூரையின் கீழான ஒட்டு மொத்த பொருள் கொள்வனவு அனுபவத்தை அளிப்பதாகும் என்று றிச்சட் பீரிஸ் விநியோக நிறுவனத்தின் சந்தைப் படுத்தல் பிரிவு தலைவர் மினோத் டி சில்வா கூறினார். நத்தார் கொண்டாட்டங்களின் மிக முக்கிய அடையாளச் சின்னம் கிறிஸ்மஸ் தாத்தாவாகும். எனவே நத்தார் தாத்தா மூலமான இந்த விநியோக முறை நிச்சயம் இளையவர்களையும் முதியவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025