Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 24 , மு.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
Dell EMC தங்கப் பங்காளர் நிலையைப் பெற்றுள்ளதாக Avian Technologies அறிவித்துள்ளது. சிறந்த வருமான மீட்டல், நற்சான்றுகளைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிலையாக இது அமைந்துள்ளது.
இந்த Dell EMC தங்கப் பங்காளர் நிலையைப் பெற்றுள்ளதன் ஊடாக, Avian Technologies மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு மேலும் புதிய சந்தைகளுக்குச் செல்வதற்கு வழியமைத்துள்ளது.
மேலும், தனது நிலையை உறுதி செய்யும் வகையில் Avian Technologies ‘சிறந்த Dell EMC Enterprise மீள்விற்பனையாளர் - இலங்கை’ மற்றும் ‘சிறந்த Dell EMC Commercial மீள்விற்பனையாளர் - இலங்கை’ ஆகிய நிலைகளையும் Dell பவர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் பெற்றுக் கொண்டது.
இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. முன்னர் சிறந்த Commercial Tier2 வணிகப் பங்காளர் விருதை 2013/14 நிதியாண்டில் Dell பவர் விருதுகளில் பெற்றுக் கொண்டது. 2016இல் Dell SADMG பங்காளர் மாநாட்டின் போது, சிறந்த வணிக மீள்விற்பனையாளர் இலங்கை கௌரவிப்பையும் பெற்றுக் கொண்டது.
2006 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Avian குரூப்பின் அங்கத்துவ நிறுவனமாகத் திகழும் Avian Technologies பரிபூரண தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் உறுதியான உதவிச் சேவைகளை உயர் தரத்திலும், உயர் தலைமைத்துவத்தைக் கொண்டும் வழங்குகிறது.
மேலும், நிறுவனத்தால் உலகின் சிறந்த வர்த்தக நாமங்களுடன் இணைந்து வெவ்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி வருகிறது.
Avian Technologies இன் பணிப்பாளர் புத்திக லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “தங்கப் பங்காண்மை நிலை என்பது, நாம் வழங்கும் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் நம்பிக்கை, உயர்மட்ட உதவிச் சேவை மற்றும் செலவுச் சிக்கனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் எமது வெற்றிகரமான இயக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வியாபார செயற்பாடுகளில் வழமைக்கு மாறாகச் சிந்திக்கும் எமது ஆற்றல் காரணமாக, எம்மால் இந்த நிலையை எய்தக்கூடியதாக இருந்தது. மேலும், உயர் சேவை மட்டங்களை எய்துவதற்கான எமது அர்ப்பணிப்பும் இந்த நிலையை எய்துவதில் பங்களிப்புச் செலுத்தியிருந்தது” என்றார்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025