2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

CDBயில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கௌரவிப்பு

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 04 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிச் சேவைகளை வழங்குவதில் துறையில் முன்னோடியாகவும், வெற்றிகரமாக கூட்டாண்மை செயற்பாடுகளை இரு தசாப்த காலமாக முன்னெடுக்கின்றமையை கொண்டாடும் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), தனது நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. CDB உடன் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக இணைந்து நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு, ஒப்பற்ற சேவை மனநிலை மற்றும் புத்தாக்கமான செயற்பாடுகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது நிறுவனத்தின் இருபது ஊழியர்களுக்கு பிரத்தியேகமான 20ஆம் ஆண்டு நினைவுச்சின்னம் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நினைவுச் சின்னங்களை அன்பளிப்பு செய்ததன் பின்னர், CDB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நானயக்கார கருத்து தெரிவிக்கையில், 'இரு தசாப்த காலமாக CDB செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதன் மூலமாக, அதிகளவு ஊக்கத்தைக் கொண்ட ஒரு அணியின் மூலமாக மட்டுமே அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு போன்றன வழங்கப்பட முடியும் என்பது உறுதியாகியுள்ளது. தொழில்முயற்சியாண்மை, புத்தாக்கம் மற்றும் பங்காளர்களின் வாழ்க்கை முறைகளின் மட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட CDB இன் நோக்கத்தை மையப்படுத்தி செயலாற்றுவதில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். இது எம்மைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது' என்றார். 

கடந்த 20 ஆண்டுகளில், நிதிச் சேவைகள் துறையில் CDBஐ முன்னோடியாக திகழச் செய்யும் வகையில், மக்களை அடிப்படையாகக் கொண்ட வியாபார செயற்பாடுகள் மற்றும் மனித உணர்வுகள், மனித ஈடுபாடுகள் மற்றும் மனித நேயம் அடிப்படையிலான செயற்பாடுகள் CDB அணி செயலாற்றி வருகிறது. எனவே, அவர்களின் துறைசார் மற்றும் புத்தாக்கமான இயலுமைகள் மற்றும் ஒப்பற்ற செயற்பாடுகள் ஆகியவற்றுக்காக மீள ஏற்பாடு செய்வதற்கும், கௌரவிப்பதற்கும் மற்றும் மதிப்பை வழங்கவும் நாம் தீர்மானித்தோம். இந்த கௌரவிப்பு நிகழ்வின் போது, CDB உடன் அர்ப்பணிப்பாக செயலாற்றி வரும் ஊழியர்களுக்கு மேலும் சில வெகுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன. நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்ந்த 10 வருட சேவையை பூர்த்தி செய்த அணியைச் சேர்ந்த 36 அங்கத்தவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுடன் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்கும் இந்த சுற்றுப் பயணத்தில் இணைந்து கொள்வதற்கான நிதி உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன. இதற்கமைய மொத்தமாக 79 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மலேசிய சுற்றுப் பயணத்தை அனுபவித்திருந்தனர்.

நிர்வாகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கும் வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும், நிர்வாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட காலமாக இணைந்திருக்கும் 22 பேருக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்திருந்த 8 பேருக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.  

நானயக்காரவை பொறுத்த மட்டில் CDBஇன் முதுகெலும்பாக இந்த அணி அமைந்துள்ளது. 'எமது 20 ஆண்டு கால பயணத்தில் நாம் எதிர்கொண்ட சவால்கள் பலவாகும். ஆனாலும், எமது செயலணி இந்த சவால்களை எதிர்கொண்டு மேலும் வலுவடைந்துள்ளது. எமது பெறுமதி வாய்ந்த இந்த பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம். இந்த உணர்வு பூர்வமான அணி, பொதுவான அர்ப்பணிப்புடன், சரியான வழியில் செயலாற்றியதன் மூலமாக CDB, 2001 – 2002 காலப்பகுதியில் இழப்புகள் பதிவு செய்ததிலிருந்து வருமானமீட்டும் நிலைக்கு உயர்ந்திருந்தது. அன்றிலிருந்து இலங்கையின் நிதித்துறையில் முன்னணி நிதி நிறுவனமாக படிப்படியாக உயர்ந்துள்ளது. எமது பங்காளர்கள் மத்தியில் நாம் பெற்றுள்ள நன்மதிப்பு மற்றும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில் நாம் பெற்றுக் கொண்ட கௌரவிப்பு ஆகியவற்றின் மூலமாக எமது வெற்றி வாகை சூடும் அணியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் உறுதியாகியுள்ளன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X