Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பாக சித்தியெய்தும் மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கௌரவிப்பது சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் (CDB) நிறுவனத்தின் CSR முயற்சிகளின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது. நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற CDB “சிசு திரி” புலமைப்பரிசில் திட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறப்பாக சித்தியெய்திய 36 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட செலிங்கோ லைஃவ் நிறுவனத்தின் பணிப்பாளர் பாலித ஜயவர்தன, எதிர்கால தலைவர்களாக வரவிருக்கும் மாணவர்களை கௌரவித்திருந்தார்.
CDB நிறுவனத்தின் MD/CEO மஹேஷ் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் கல்விக்கு பங்களிப்பு வழங்குவதே எமது நிறுவனத்தின் CSR திட்டங்களின் முதன்மை எதிர்பார்ப்பாகும். நிலையான செயற்பாடுகளைக் கொண்ட எமது நாட்குறிப்பில் மிக முக்கிய நிகழ்வாக இதுவுள்ளது. எமது நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்தும், அவர்களது கனவுகள் மற்றும் அபிலாஷைகளை எய்தி தேசத்துக்குப் பெருமை சேர்க்க உதவுவதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம்” என்றார்.செலிங்கோ லைஃவ் நிறுவனத்தின் பணிப்பாளர் பாலித ஜயவர்தன தெரிவித்தாவது, “கல்வியை மிகப்பெரிய சொத்தாக இலங்கையிலுள்ள பெற்றோர் கருதுவதுடன், எதிர்வரும் காலங்களில் நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கவுள்ள திறமையான மாணவர்களுக்கு சிசு திரி புலமைப்பரிசில் வழங்குவதையிட்டு CDB பெருமை கொள்ளலாம்” என்றார்.
ஒன்பது ஆண்டுகளாக வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தில் இதுவரை 14 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், 370 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் மூலம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்களுக்கு வருடாந்தம் ரூ. 50,000 படி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் வரை வழங்குகிறது. அதேபோல க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் சித்தியெய்தும் மாணவர்களுக்கு தலா ரூ. 30,000 படி அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றும் வரை வழங்குகிறது. CDB நிறுவனமானது நிதியுதவித் தொகையினை மாணவர்களின் கணக்கிலிடாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றமையினால் அதன் அனுகூலங்களை மாணவர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும்.
35 minute ago
35 minute ago
39 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
35 minute ago
39 minute ago
41 minute ago