2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

CEAT அடுத்த கட்டமாக CAMSO வர்த்தக நாம வியாபாரப் பிரிவை கையகப்படுத்தல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 06 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

CEAT லிமிடெட், Off-Highway Tyres (OHT) பிரிவில் மூலோபாய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் வகையில், Michelin Group இன் CAMSO Construction Compact Line வியாபாரத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதில், இலங்கையின் மிதிகம பகுதியைச் சேர்ந்த ஆலை மற்றும் கொட்டுகொடவில் அமைந்துள்ள Casting Product ஆலை போன்றனவும் அடங்கியுள்ளன. இந்த பரிவர்த்தனையினூடாக, CAMSO வர்த்தக நாமத்தின் சர்வதேச உரிமையாண்மையை CEAT க்கு வழங்கியுள்ளது. மூன்று வருட கால அங்கீகாரமளிப்பு காலப்பகுதியைத் தொடர்ந்து, இந்த நிலை நிரந்தரமாக ஒதுக்கப்படும்.

CAMSO வர்த்தக நாமத்தை CEAT கையகப்படுத்தியுள்ளமை, அதிக இலாபமீட்டும் OHT பிரிவில் ஒரு முன்னணி உலகளாவிய செயற்பாட்டாளராக மாறுவதற்கான அதன் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. கடந்த தசாப்தத்தில், CEAT ஒரு வலுவான விவசாய பிரிவை உருவாக்கியுள்ளது. மேலும் CAMSOவின் சிறிய கட்டுமான உபகரண டிராக்குகள் மற்றும் டயர்களின் நிபுணத்துவத்துடன், 40 க்கும் மேற்பட்ட உலகளாவிய OEMகள் மற்றும் பிரீமியம் சர்வதேச OHT விநியோகஸ்தர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து Compact line bias tyres டயர்கள் மற்றும் கட்டுமான டிராக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து Michelin முற்றிலும் வெளியேறும்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் CEAT Limited மேற்கொள்ளத் தீர்மானித்த முதலீட்டுக்காக எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அண்மைக் காலங்களில் இலங்கையின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் பெருமளவு பங்கை இந்தியா கொண்டுள்ள நிலையில், இந்த நிலை தொடர்வதை காண்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இரு நாடுகளுக்குமிடையிலான முதலீட்டு ரீதியான பங்காண்மை விரிவாக்கப்படும் நிலையில், இரு நாடுகளின் தலைமைத்துவத்தினால் முறையாக வழிநடத்தப்படுகின்றன. எமது மக்களுக்காக பகிரப்பட்ட சுபீட்சத்தை உருவாக்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் ஆதரவளிக்கின்றன. இலங்கையில் இந்தியாவின் தனியார் துறை முதலீடுகளை மேற்கொள்ளும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகள் மேலும் வலிமை பெறும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

CEAT Limited இன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் தலைமை நிர்வாகி அர்னாப் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “CEAT இன் நீண்ட கால நோக்கான, Off-Highway mobility இல் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டாளராக திகழ்வதில், ஒரு படியை முன்னேற்றுவதற்கு CAMSO வர்த்தக நாமத்தை கையகப்படுத்தியுள்ளமை மற்றும் சிறிய கட்டுமான சாதனங்கள் வியாபாரத்தை ஒன்றிணைத்துள்ளமை என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தயாரிப்புகள், ஆற்றல்கள் மற்றும் சந்தைகளில் எமது மேம்படுத்தப்பட்ட வலிமைகளினூடாக, புதிய பகுதிகளில் பிரவேசிக்க உதவியாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அத்துடன், எமது தயாரிப்புகளை விரிவாக்கம் செய்யவும், நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

CEAT Specialty இன் தலைமை நிர்வாகி அமித் டொலானி கருத்துத் தெரிவிக்கையில், “CAMSO இன் முன்னணி வர்த்தக நாமம் மற்றும் கட்டுமான சாதனங்கள் வியாபாரம் CEAT உடன் ஒன்றிணைத்துள்ளமை என்பது, எமது நிலைமாற்றப் பயணத்தில் முக்கிய அங்கத்தைப் பிடித்துள்ளது.  சுமூகமான மாற்றம் தொடர்பில் நாம் உடனடியாக கவனம் செலுத்துவதுடன், வாடிக்கையாளர் திருப்திகரத் தன்மையை உறுதி செய்து, இலங்கையில் எமது செயற்பாடுகளை வலிமைப்படுத்தவதில் கவனம் செலுத்துவோம்.” என்றார்.

CAMSO இன் சிறிய கட்டுமான சாதனங்கள் வியாபாரம் தற்போது பிரிவின் அங்கமாக அமைந்திருக்கும் நிலையில், Off-Highway டயர்கள் மற்றும் ட்ராக்கள் பிரிவில் உலகின் அதிகம் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமம் எனும் நிலையை நோக்கி CEATபயணிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X