Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதலாவது Dolby Atmos Multiplex சினிமா திரையரங்கின் அனுபவத்தை Colombo City Centre இன் Scope சினிமாவிலிருந்து பெற்றுக் கொள்ள முடியுமென Colombo City Centre வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட திரையரங்குகளை உள்ளடக்கிய Scope சினிமா அதிநவீன தொழில்நுட்பத்தில் இரசிகர்களுக்கு மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிபடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: Colombo City Centre இன் 3ஆம் தளத்தில் நிறுவப்பட்டுள்ள Scope சினிமா அரங்குகளில் ஒரு தினத்துக்கு 30 காட்சிகள் திரையிடப்படுவதோடு, அறுசுவை உணவுகளையும் சுவைத்து மகிழவும், உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து இரசிக்கவும் முடியும்.
Dolby Atmos சினிமா அரங்கில் 220 இருக்கைகளோடும், விசேட VIP திரையரங்கில் 24 இருக்கைகளுடன் 6 திரையரங்குகளிலும் 750 இருக்கைகள் மொத்தமாக உள்ளன.
இந்த Scope சினிமா அரங்குகளின் ஒவ்வோர் இருக்கையும் அதிசொகுசானவையாகும். இந்த அதிசொகுசு வசதிகளால் ஊனமுற்றவர்களும் சுதந்திரமாகவும் சௌகரியமாகவும் திரைப்படங்களை பார்த்து இரசிக்க முடியும். இங்கு வரும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் எந்தவித குறைபாடும் இல்லாமல் பரிபூரண சினிமா அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதிநவீன Dolby Atmos ஒலியமைப்பு, 4K ப்ரோஜெக்ஷன் கொண்டு சினிமா அரங்கமான இதில் நேரடி திரை அனுபவம், விசேட ஒலியமைப்பை வேறு எந்தவொரு சினிமா அரங்குடனும் ஒப்பிட முடியாது. 4K லேசர் ப்ரோஜெக்ஷன் இருப்பதால் இங்கு அனுபவித்திடக்கூடிய உயர்தரம், நேரடித் தன்மை, வர்ணங்கள் இலங்கையில் வேறு எந்தவொரு சினிமா அரங்கிலும் அனுபவிக்க முடியாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .