Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 13 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் விவசாய இயந்திரங்கள் விற்பனைப் பிரிவானது, அண்மையில் இந்தியாவின் கேரளாவிலுள்ள கொச்சியில் தனது Mahindra டிராக்டர் முகவர்கள் மாநாட்டை நடாத்தியிருந்தது. இலங்கையிலிருந்து 75க்கும் மேற்பட்ட Mahindra டிராக்டர் முகவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கொச்சியிலுள்ள 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலான மரியட் ஹோட்டலில் இடம்பெற்ற இம்மாநாட்டின் மூலமாக னுஐஆழு நிறுவனம் இலங்கைக்கு வெளியில் முதன்முறையாக ஏற்பாடு செய்த நிகழ்வாக, அந்நிறுவனத்தின் விவசாய இயந்திரங்கள் விற்பனைப் பிரிவு சாதனை படைத்துள்ளது. மேலும், உள்நாட்டிலுள்ள விவசாய துறை சார்ந்த முகவர்களுக்காக இலங்கைக்கு வெளியில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகவும் நிச்சயமாக இது அமையும்.
முகவர்களும், DIMO நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் விமானம் மூலமாக கொச்சியை சென்றடைந்து, அழகிய கொச்சி மரியட் ஹோட்டலில் 2 இரவுகளும் 3 பகல் பொழுதுகளும் தங்கியிருந்தனர். மாபெரும் நிகழ்வானது வெள்ளிக்கிழமை இரவு, ஹோட்டலின் பிரதான நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையிலுள்ள Mahindra டிராக்டர் முகவர்கள், DIMO Agri பிரிவின் பணியாளர்கள், DIMO சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் இந்தியாவின் Mahindra Tractors நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கேரளாவின் பண்டைய கொண்டாட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'மாமாங்கம்' என்ற தொனிப்பொருளில் முகவர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த நிகழ்வும் சிங்கள மொழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மூன்று பாகங்களைக் கொண்டிருந்தது. பெறுபேற்றுத்திறன் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையப் பெற்றதன் அடிப்படையில் முகவர்களுக்கான இனங்காணல் அங்கிகாரம், புதிய Arjun Novo மற்றும் Yuvo வரிசை டிராக்டர்களின் அறிமுகம் மற்றும் Mahindra டிராக்டர் அமுலாக்க வரிசையின் அறிமுகம் என மூன்று பாகங்கள் நிகழ்வில் அடங்கியிருந்தன.
புதிய Arjun Novo ஆனது பல்வேறு வகைப்பட்ட விவசாயத் தேவைகளின் பயன்பாட்டுக்கு வெற்றிகரமாக உதவுவதுடன், புதிய, உயர்-நடுத்தர-குறைந்த இயந்திர பரிமாற்ற முறைமையையும், மேலதிகமான 7 தனித்துவமான வேகங்களைத் தருகின்ற 15F+3R கியர்களையும் கொண்டுள்ளது. Mahindra Yuvo டிராக்டர்கள் 30-45 குதிரை வலு (UP) வரிசையில் கிடைப்பதுடன், உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டுடன் கூடிய வால்வு வடிவமைப்பு மற்றும் 1500 கிலோ பாரமுயர்த்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
43 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago