Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 22 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கல்விக் கண்காட்சி, தொழில் சந்தை நிகழ்வான EDEX Expo, மீண்டும் ஒரு தடவை இடம்பெறுகிறது.
2019 ஜனவரி 18 முதல் 20 வரை கொழும்பில் BMICH இல் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், 2019 ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் கண்டி KCC மய்யத்திலும் இது இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 16ஆவது ஆண்டாகவும் இடம்பெறுகின்ற EDEX, உயர் கல்வியின் அடுத்தபடி, தொழில் தெரிவுகளைப் பொறுத்தவரையில் இளம் தலைமுறையினர் மத்தியில் அனைத்துப் புகழ் பெற்ற நாமமாக மாறியுள்ளது.
இலங்கையிலுள்ள இளம் தலைமுறையினர் சர்வதேசரீதியாகப் போட்டித்திறன் கொண்டவர்களாக திகழ்வதற்கு அது தொடர்ச்சியாக அவர்களுக்கு வலுவூட்டி வந்துள்ளதுடன், சாதனைகளின் சிகரத்தை அவர்கள் எட்டுவதற்கும் வழிகாட்டியாக செயற்பட்டு வந்துள்ளது.
இடைநிலைக் கல்விக்கு பின்னரான கல்வியை வழங்குவதுடன் தொடர்புபட்ட முக்கியமான பல உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்பினரையும் ஒன்றுசேர்க்கும் ஒரு களமாக EDEX Expo 2019 திகழவுள்ளதுடன், உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து உயர் கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 200க்கும் மேற்பட்ட கல்விக் கண்காட்சிக்கூடங்களும் இதில் இடம்பெறுகின்றன.
EDCIL, நன்மதிப்புப் பெற்ற பல இந்தியப் பல்கலைக்கழகங்கள், ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாட்டுக் கண்காட்சிக்கூடங்கள் ஆகியவற்றின் வரவானது சர்வதேச பிரசன்னத்தை மேம்படுத்தியிருந்தது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா, சிங்கப்பூர், பாகிஸ்தான், கனடா, ஹங்கேரி, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலுள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களின் நேரடி, உள்நாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றலானது இக்கண்காட்சியின் பெறுமதியை மேலும் அதிகரிக்கச் செய்திருந்தது.
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago