2025 ஜூலை 30, புதன்கிழமை

Flame விருதுகளில் ஓலீமா இன்டஸ்ரீஸ் கௌரவிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 15 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பானப்  பாதணி உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள ஒலீமா இன்டஸ்ரீஸ் தனியார் நிறுவனம், மேல் மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “2016 ப்ளேம்” தொழில்முயற்சியாளர் விருது வழங்கல் விழாவில் பாதணிகள் மற்றும் தோற்பொருட்கள் உற்பத்தி பிரிவில் அதிசிறப்பு விருதை வென்றுள்ளது.  

கொழும்பு Galleface ஹொட்டலில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஒலீமா இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ். கே அஜித் பிரியதர்ஷன இந்த விருதை பெற்றுக்கொண்டார். உயர் தரத்தில் அழகிய வடிவங்களிலான ஒலீமா உற்பத்திகள் இறப்பர் கம் பூட்ஸ், பாதுகாப்பானப் பாதணிகள், அலங்கார பாதணிகள், கென்வஸ் பாதணிகள், வேலைத் தள பாதுகாப்பு அணிகலன்கள் உள்ளிட்ட மேலும் பல உற்பத்திகளைக் கொண்டுள்ளன.  

தொம்பே, தெக்கட்டன, பெலஹலவில் அமைந்துள்ள ஒலீமா தொழிற்சாலை அதி நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் உள்நாட்டு இறப்பரை மூலப்பொருட்களாக கொண்டு உயர் தரத்திலான உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .