Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ford Motor Company மற்றும் உள்நாட்டில் அதன் விநியோகப் பங்காளரும், Softlogic Holdings PLC நிறுவனத்தின் துணை நிறுவனமுமான Future Automobiles (Pvt) Limited ஆகியன ஒன்றிணைந்து Ford பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மானியத் திட்ட முன்னெடுப்பின் கீழ் World Vision Lanka நிறுவனத்துக்கு 10,000 அமெரிக்க டொலர் மானியத் தொகையை வழங்குவது தொடர்பில் அறிவித்துள்ளன. இந்த ஆண்டில் Ford Motor Company மற்றும் World Vision Lanka ஆகியன இணைந்து முன்னெடுக்கின்ற மூன்றாவது செயற்றிட்டமாக இது அமைந்துள்ளது.
இலங்கையில் சிறுவர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து வறுமை மற்றும் அநீதிக்கு எதிராக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்ற ஒரு இலாப நோக்கமற்ற ஸ்தாபனமான World Vision Lanka, நாட்டில் 16 மாவட்டங்களில் தனது சேவைகளை தற்போது வழங்கி வருகின்றது.
Ford Motor Company இன் மனிதநேய நன்கொடை அங்கமான Ford Motor Company Fund இடமிருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ள 10,000 அமெரிக்க டொலர் தொகையானது, உச்சமுனைத் தீவில் வசிக்கின்றவர்களுக்கு நிலைபேற்றியலுடன் பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும்.
அங்கு வசிக்கும் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் கிணற்றிலுள்ள நீர் அதிக உப்புத்தன்மை காரணமாக குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமையால், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் அன்றாடம் முகங்கொடுக்கின்ற சவால்களைக் குறைப்பதற்கு இத்திட்டத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டும் வசதிகள் அவர்களுக்கு உதவும்.
“எமது நிறுவனத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற சமூகங்கள் மத்தியில் அவற்றுக்கு சேவையாற்றுவதற்கு Ford எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளதுடன், இலங்கையிலுள்ள மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் உண்மையான நற்பயன்களை வழங்குவதற்கு உதவுகின்ற வகையில் நாம் தற்போது முன்னெடுத்து வருகின்ற முயற்சிகள் மற்றும் பங்களிப்புக்களையிட்டு நாம் மிகுந்த பெருமை அடைகின்றோம்” என்று Future Automobiles (Pvt) Limited நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
5 hours ago