2025 ஜூலை 30, புதன்கிழமை

GOTO அமைப்பு உதயம்

George   / 2016 நவம்பர் 30 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தமிழ் வர்த்தக சங்கம், “ உலக தமிழ் வம்சாவளி அமைப்பை ” தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு ஆரம்பித்து  உள்ளது. அதில் உலகெங்கும் உள்ள தமிழ் வம்சாவளியினர் ஒன்றிணைந்து செயற்படவும் , தமிழ் வழி கல்வியை ஊக்கு விக்கவும், தமிழ் கலை கலாச்சாரம்  பாரம்பரியம் போன்றவைகளை நம் சந்ததினருக்கு அறியும் வகையில் ஏற்பாடுகளை செய்வது இவ் அமைப்பின் கடமையாகும்.

மேலும், இவ் அமைப்பு 28 நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் , தமிழ் வர்த்தக சங்கங்கள் , ஒன்றிணைக்கவும் தமிழ் இணைய வழி கல்வி, ஊடகம் சார்ந்த நிகழ்வுகள் ஒருங்கிணைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 6 மற்றும் 7ஆம் திகதிகளில் சென்னையில் உலக தமிழர் திருநாள் விழாவும் , உலக தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடல் நிகழ்வும் நடைபெற உள்ளது. அதில் உலகெங்கும் உள்ள தமிழ் செயல் அதிகாரிகள் , தொழிலதிபர்கள் , அரசு பிரதிநிதிகள் அயல் நாடு தமிழ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அயல் நாட்டு மத்திய மாநில அமைச்சர்கள் துணை முதல்வர்கள் , மேயர், சபா நாயகர்கள், நீதி அரசர்கள் போன்றவர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந் நிகழ்வுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துரையின் ஆதரவு கோரப்பட்டுள்ளது . இவ் நிகழ்வில் உலகில் தலை சிறந்த தமிழர் ஒருவருக்கு ‘உலக தமிழன் விருது’ மற்றும் சாதனை படைத்த தமிழர்களுக்கு ‘சாதனை தமிழன்’ விருதும் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களை அறிய, உலக தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலக தமிழர் திருநாள் ஒருங்கிணைப்பாளர், ஜெ.செல்வகுமார் : +91 9841042540 /  Whatsapp: +60 166167708 / Email:  gotoorganisation@gmail.com தொடர்பு கொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .