2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

GSMA APAC IoT உடன் மொபிடெல் கைகோர்ப்பு

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானில் இடம்பெற்ற Smart City Summit & Expo நிகழ்வில் IoT தொழில்நுட்பத்தை இலங்கையில் விருத்தி செய்திடும் நோக்கத்தோடு மொபிடெல் GSMA APAC IoT கூட்டிணைவு நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது. இந்த GSMA APAC IoT நிகழ்ச்சித்திட்டமானது, பிராந்தியத்தின் மிகப்பெரிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில், மொபைல் ஒப்பரேட்டர்கள், ஆலோசகர்கள், டெவலொப்பர்கள், உற்பத்தியாளர்கள், கணினி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செங்குத்துத் தீர்வு வழங்குவோர் என 500க்கும் மேற்பட்ட பங்காளிகள் இருப்பதுடன், 2020ஆம் ஆண்டளவில் மேலும் 2,000க்கும் மேற்பட்ட பங்காளிகள் வந்து சேரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.   

“மொபைல் ஒப்பரேட்டர்கள் தங்கள் பங்காளிகளுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலம் ஆசிய பசுபிக் பிராந்தியமானது IoT தொழில்நுட்பத்தை தக்கவைத்துக்கொள்வதுடன் அதன் மிக வேகமான வளர்ச்சியைத் தூண்டுகிறது” என ஆசிய பசுபிக், GSMA இன் தலைவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சித் திட்டமானது, IoTஇன் விருத்திக்கு ஆதரவு அளிக்கும் நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது. பிராந்திய ரீதியான ஒரு IoT சமூகத்தினை உருவாக்கி அதன் கூட்டிணைவுக்கு உதவுவதுடன் அது தொடர்பான அறிவினைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.  

இலங்கைக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுவருவதில் மொபிடெல் பாரிய அளவிலான முதலீட்டினை மேற்கொண்டுள்ளது. இந்த மூலோபாய ரீதியான கூட்டிணைவானது, மொபிடெலை வலுப்படுத்துகிறது. தேசிய மொபைல் சேவை வழங்குனர் என்ற வகையில் கொழும்பு Trace City யில் அமைந்துள்ள IoT ஆய்வகத்தின் மூலம் IoT தொடர்பான புத்தாக்கங்களை மொபிடெல் மேலும் வலுப் பெறச்செய்கிறது.   

மொபிடெல் 2017ஆம் ஆண்டு முதலாவது முறையாக இலங்கைக்கு Narrowband IoT ஐ அறிமுகப்படுத்தி வைத்தது. அதன் மூலம் ஒரு டெவலொப்பர் சமூகத்தை உருவாக்கி இன்று வரை பல்வேறு வகையான தீர்வுகள் தொடர்பில் தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .