Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு இலாபநோக்கற்ற குழுக்களால் நிதியளிக்கப்படும் அமைப்பான Give2Lanka (Gte) தனது புதிய இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் நிதி திரட்டும் நோக்கத்துடன் இந்த இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் கல்வி மற்றும் அது தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
Give2Lanka உதவியில் இயங்கும், முன்னணி சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான ‘பிரைட் சிறுவர் புலமைப்பரிசில்’ திட்டத்தை ‘பெரென்டினா அமைப்பு’ நடைமுறைப்படுத்தி வருகிறது. தெரிவு செய்யப்பட்ட க.பொ.த உயர் தரப் பரீட்சை முதல், பட்டப்படிப்பை பின்தொடர்வது வரை, இரு கட்டங்களாகப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது. ‘பெரென்டினா’வுக்கு Give2Lanka இனால் நிதி உதவி வழங்கப்பட்டிருந்ததுடன், அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக நிதி திரட்டும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.
Give2Lanka நிறைவேற்று தலைவர் துலான் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “வலுவூட்டலுக்கு, கல்வி அடிப்படையானது என்பது எமது நம்பிக்கையாகும். இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள Give2Lanka இணையத்தளம், இலங்கையர்களுக்கு இந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிகோலியுள்ளதுடன், நாம் செய்யும் முக்கியமான செயற்பாடுகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது. மேலும், நாளையை தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது” என்றார்.
சமுர்த்தி அனுகூலம் பெறுவோரின் குடும்பங்களின் பிள்ளைகள் அல்லது 5,000 ரூபாய்க்குக் குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இந்தப் புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்படுவார்கள். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆறு சிறப்புத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கணிதத்தில் ‘B’ சித்தியை எய்தியிருக்க வேண்டும்.
11 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
59 minute ago
1 hours ago