Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மிகப்பெரிய தனியார்துறை வர்த்தக வங்கியான HNB பீ.எல்.சீ, தங்களது வார இறுதி வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்காக, ஏற்கெனவே உள்ள 7 நாள் வங்கிச் சேவை வாடிக்கையாளர் நிலையங்களில் தனிப்பட்ட நிதிக்கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையின் 12 நகரங்களிலுள்ள முழுமையான வசதிகள் அடங்கிய இந்த நிலையங்களில், வாடிக்கையாளர்கள் வார இறுதி நாட்களிலும் வழமையான வங்கிச்சேவைகளுக்கு மேலதிகமாக கடன் சேவைகளையும் தற்போது பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையங்களில் வாடிக்கையாளர்கள் ஆலோசனைகள், தனிப்பட்ட மற்றும் வீட்டுக்கடன் உள்ளிட்ட HNB இன் தனித்துவமான நிதித் தயாரிப்புகள், லீசிங் மற்றும் கடனட்டை சேவைகள் என்பவற்றை இலகுவாகவும் வசதியான முறையிலும் வார இறுதி நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
வார நாட்களில் கடுமையான வேலைப்பளுவின் மத்தியில் இருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் HNB வழங்கும் இந்த வங்கிச்சேவைகள் மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்குமெனக் கருதப்படுகிறது.
வங்கிக்குச் செல்ல முடியாமல் இருக்கும் அத்தகைய வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள 7 நாள் வங்கிச் சேவை வாடிக்கையாளர் நிலையங்களுக்குச் சென்று வாரஇறுதி நாட்களில், கடன்கள் முதல் லீசிங் வரை அனைத்து வங்கிச் சேவைகள் தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மேலதிக சேவைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த HNB இன் சில்லறை வங்கிக்கான பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜயமான, “எங்களது 7 நாள் வங்கிச் சேவை வாடிக்கையாளர் நிலையங்களில் தனிப்பட்ட கடன்கள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை உள்ளடக்குவதன் மூலம் HNB ஆனது நடைமுறைக்கேற்ற முடிவை எடுத்துள்ளது.
தற்போது வாடிக்கையாளர்கள் வார இறுதி நாட்களில் அர்ப்பணிப்புமிக்க எங்கள் ஊழியர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதன் மூலம், ஆலோசனைகள், உதவிகள், விண்ணப்பங்களைப் பெறுதல், ஆவணங்களைக் கையளித்தல் போன்ற சேவைகளையும் எவ்வித இடையூறுமின்றி பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
தற்போது இந்தச் சேவைகள் வெள்ளவத்தை, ராஜகிரிய, மஹரகம, நீர்கொழும்பு, அனுராதபுரம், கிரிபத்கொட, குருணாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வாடிக்கையாளர் நிலையங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தற்போது வார இறுதியில் சனிக்கிழமைகளில் மாத்திரம் சேவைகளை வழங்கும் மேலும் 40 இத்தகைய வாடிக்கையாளர் நிலையங்களும் முழுமையான சேவைகளை வழங்கக்கூடிய வார இறுதி சேவை நிலையங்களாக மாற்றப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago