Gavitha / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாவனையாளர்களுடன் ஒரு தசாப்த கால பூர்த்தியை கொண்டாடும் வகையில் “Heroes of Viber” பக்கேஜை அறிமுகம் செய்துள்ளதாக முன்னணி தொடர்பாடல் app ஆன Viber அறிவித்துள்ளது. கடந்த காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் Viber பாவனையினூடாக மக்களின் வாழ்க்கையில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது என்பதைக் குறிக்கும் 14 மினி ஆவணத் தொடர்களைக் கொண்ட பக்கேஜாக இது அமைந்துள்ளது. அர்த்தமுள்ள இணைப்புகளை ஏற்படுத்துவதற்கு Viber ஐ பயன்படுத்தியிருந்த மக்களுடன் இணைந்து தனது பத்து வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது முதல், Viber இனால் free VoIP calls, to group video chats, fun stickers மற்றும் top-notch security protocols போன்றன வழங்கப்பட்டுள்ளன. இன்று, ரஷ்யா, அல்கேரியா, ஈராக், பல்கேரியா, கிறீஸ், சேர்பியா, உக்ரேன், நேபாளம், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் ஹீரோக்களை Viber கொண்டாடுகின்றது. இந்நாடுகளிலிருந்து 14 குறுந்திரை ஆவணங்களை வீடியோ செய்துள்ளது. இதில் பங்கேற்றவர்கள் வெவ்வேறு வயது மற்றும் பின்புலங்களைக் கொண்டவர்களாக அமைந்திருப்பதுடன், தமது பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு Viber பயன்படும் விதம், இந்த கட்டமைப்பினூடாக உதவியை நாட முடிவது போன்ற பல விடயங்களைப் பகிர்ந்திருந்தனர்.
Rakuten Viber இன் பிரதம வளர்ச்சி அதிகாரி அனா ஸ்நமென்ஸ்கயா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 10 வருட காலப்பகுதியில் நாம் எய்திய வளர்ச்சியில் உலகளாவிய ரீதியில் காணப்படும் எமது பாவனையாளர்கள் பெருமளவு பங்களிப்பு வழங்குகின்றனர். Viber இல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு chat இன் பின்னணியிலும் உண்மைக் கதை ஒன்றுள்ளது. எமது பாவனையாளர்கள் மீது நாம் விருப்பம் கொண்டுள்ளதுடன், அவர்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்வதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றோம். மக்களால் மகிழ்ச்சி, களிப்பு மற்றும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ள எம்மைத் தெரிவு செய்துள்ளமையானது, உண்மையில் எமக்கு அர்த்தம் சேர்த்துள்ளது. இந்த பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.
“Heroes of Viber” முழுத் தொடரை பார்வையிட இங்கே அழுத்தவும் - https://lp.viber.com/heroes-of-viber/
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago