2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Hutch வழங்கும் On Screen Buddy

Gavitha   / 2017 மார்ச் 08 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

HUTCH, “On Screen Buddy” என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிற்றுறையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு சேவையாக இது திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

கணககு நிலுவை தொடர்பான விபரங்களை அறிய மற்றும் புதியத் திட்டங்களைச் செயற்படுத்த குறுகிய குறியீடுகளை (short codes) எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டிய ஒரு கட்டாய நிலை காணப்பட்டது. அது இணைய வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இணைய பிரவுசரை உபயோகிப்பவர்கள் மற்றும் உபயோகிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி, திறன்பேசியை உபயோகிக்கின்ற அனைத்து Hutch வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளின் முகத்திரையில், On Screen Buddyஐ Hutch நேரடியாக அறிமுகம் செய்து வைத்துள்ளது. முகத்திரையின் ஒரு பக்கத்தில் Hutch இலச்சினை ஒன்று சிறிய அளவில் தோற்றமளிப்பதுடன், அதனை தொடுவதன் மூலமாக செய்வதன் மூலமாக உருப்பெருக்கம் செய்து, வாடிக்கையாளர்கள் தமது கணக்கு நிலுவையின் விபரங்களை கண்டறியவும், பிரபலமான தரவுத் திட்டங்களை (data) நேரடியாகத் தமது முகத்திரையில் சௌகரியமான முறையில் செயற்படுத்திக்கொள்ளவும் முடியும்.  

இந்த வசதியின் துணையுடன், வாடிக்கையாளர்கள் தமது கணக்கு நிலுவைத் தொடர்பில் எப்போதும் உடனுக்குடன் அறிந்துகொண்டு, கணக்கு நிலுவை தீர்ந்துபோகும் சமயங்களில், தமது இணைய பயன்பாடு திடீர் என்று தடைப்படும் நிலைக்கு முகங்கொடுக்காது, தேவையான மேலதிகத் திட்டங்களை முற்கூட்டியே கொள்வனவு செய்து கொள்ள முடியும்.  

இந்த சேவையின் அறிமுகம் தொடர்பில், Hutch ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா கருத்து வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்கள், Hutch சேவைகளை எவ்விதமான தடைகளுமின்றி உபயோகிக்கும் வசதியை, மிகவும் சௌகரியத்துடன் அவர்களுக்கு வழங்கும் வகையில், புத்தாக்கம்மிக்க சேவை அம்சங்களை Hutch தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றது. வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களைப் போக்கும் தீர்வுகளைக் கண்டறிந்து, அதி நவீன தொழில்நுட்ப அம்சங்களை உபயோகித்து, புத்தாக்கம் நிறைந்த, நவீன தீர்வுகளை வழங்குவதில், எமது நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு சிறந்த உதாரணமாக, Hutch On Screen Buddy அமையப்பெற்றுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.  

எமது வாடிக்கையாளர்கள் தமது அலைபேசி கணக்கினை நிர்வகிப்பதற்கு உதவுவதில் மற்றுமொரு படியாக இது அமையவேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்துடன், முற்றிலும் இலவசமாக இச்சேவை வழங்கப்படுகின்றது. முகத்திரையில் தோன்றுகின்ற இந்த app பயன்பாட்டு அடையாளத்தைத் தற்காலிகமாக அகற்றிக்கொள்ள முடியும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு இது இனிமேலும் தேவைப்படாது என்று அவர்கள் கருதினால், நிரந்தரமாக அதனை ரத்துச் செய்யவும் முடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X