Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேசத்தின் ஆறு கல்லூரிகளில் ஏழு பிரிவுகளைக்கொண்ட மாணவர்கள் குழு மூன்று நாள்களைக்கொண்ட தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபெற்றுவதற்கான அரிய வாய்ப்பை ILUKA Lanka Resources வழங்கியது.
இப் பயிற்சிப் பட்டறையின் போது சமூகம், அதன் சார்ந்த முக்கியத்துவங்கள், ஆக்கத்திறன், சிறப்பான எண்ணக்கருக்களைக் கொண்ட புத்தாக்க தீர்வு காணல் போன்ற அத்தியாவசியமான கற்கை நெறிகளைக் பயில்வதற்கான வாய்ப்பு அமையப்பெற்றது.
அண்மையில் நடைபெற்ற இப் பயிற்சி பட்டறையானது, ILUKA Lanka Resources தனியார் ஸ்தாபனத்தின் பூர்வாங்க ஏற்பாட்டினாலேயே நடத்தப்பட்டது. குழந்தைகளின் உரிமைகளுக்காக உலகம் முழுவதும் செயற்பட்டுவரும் நெதர்லாந்தின் Kids Rights இன் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி பட்டறை நிகழ்ச்சித் திட்டமனாது Without Borders மூலமாக நடத்தப்பட்டது.
Ideator எனும் நாமத்தைக் கொண்ட இந்நிகழ்ச்சித் திட்டம், ஆக்கத்திறன் எனும் தொனிப்பொருளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட அதேவேளை, கலாசார தலைமைத்துவ அபிவிருத்தி வழிமுறைகளுக்கு அமைவாக, மாணவர்களை மிக ஆக்கத்திறன்கொண்டு சிந்தித்துச் செயற்பட, இங்கு அதிகளவான வாய்ப்பு வசதிகள் வழங்கப்பட்டன.
அனைத்துக் குழுக்களுக்கும் அடிப்படை விடயங்களை அறிமுகப்படுத்திய பின், இரண்டாம் நாளானது அணிவாரியாகத் தமது ஆக்கத்திறன்களை வெளிப்படுத்திட சமூகத்தின் அத்தியாவசியப் பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அவற்றுக்கான தீர்வுகளை வடிவமைத்திடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
மூன்றாவது நாள், அனைத்து மாணவர் அணியினரும் தத்தமது தீர்வுகள், எண்ணக்கருக்களை நிகழ்ச்சித்திட்டத்தின் மதிப்பீட்டாளர்கள் முன் சமர்ப்பித்தனர்.
அதுமட்டுமின்றி மதிப்பீட்டாளர்களால் சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து, தமது கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago