2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Isuzu உரிமையாளர்களுக்கு உத்தரவாதத் தெரிவு

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் Isuzu வாகன உரிமையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த நீடிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளதாக சதொச மோட்டர்ஸ் பிஎல்சி (SML) அறிவித்துள்ளது.  

இந்தப் புதிய சலுகையின் பிரகாரம், நியம ஒரு வருட உத்தரவாத காலப்பகுதிக்கு மேலதிகமாக, Isuzu வாகன உரிமையாளர்களுக்கு Isuzu ட்ரக் வகைகளுக்காக 2 வருட உத்தரவாதம் அல்லது முதல் 100,000 கிலோமீற்றர்களுக்கான உத்தரவாதம் அல்லது முதல் 150,000 கிலோமீற்றர்களுக்கான உத்தரவாதம் Isuzu D-MAX மற்றும் MU-X வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.  

SML வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பெறுமதியை வழங்கும் வகையில் இப் புதிய உத்தரவாதம் அமைந்துள்ளதுடன், தமது வாகனங்களை பயமின்றி செலுத்தவும் முடியும். தேவையான போது, எப்பகுதியிலிருந்தும் தமது வாகனங்களுக்கான பழுதுபார்ப்புகளையும் உதிரிப்பாகங்களை மாற்றிக்கொள்வதையும் உறுதி செய்து கொள்ளலாம்.   மேலும், SML இனால் வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர வீதியோர உதவிகள் வழங்கப்படுவதுடன், அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தங்கியிருக்கும் தன்மை நீடிக்கப்பட்டுள்ளது.  

1962 இல் ஸ்தாபிக்கப்பட்ட சதொச மோட்டர்ஸ் லிமிட்டெட், இலங்கையில் Isuzu வர்த்தக நாமத்திலமைந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கான உரிமையாண்மையைப் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியடைந்து, தற்போது Isuzu வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனையில் நம்பிக்கையை வென்ற விநியோகஸ்த்தராக திகழ்கிறது.   இலங்கையில் Isuzu வாகனங்களுக்கு அங்கிகாரம் பெற்ற ஏக விநியோகஸ்த்தராக SML திகழ்வதுடன், சந்தையில் குறிப்பிடத்தக்களவு சந்தை வாய்ப்பை இலகு மற்றும் மத்தியளவு வணிக ட்ரக் வகைகளுக்காக பெற்றுக் கொண்டுள்ளன.

அப்போது முதல், இலங்கையின் பொருளாதாரத்தில் Isuzu வர்த்தக நாமத்திலமைந்த வர்த்தக வாகனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தொழிற்துறைகள் மற்றும் வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்ளவும் பங்களிப்பை வழங்குகின்றன.   வர்த்தக ரீதியான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Isuzu ட்ரக் வகைகளுக்கு மேலாக, பயணிகள் வாகனங்கள் சந்தையிலும் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது. இவற்றில் MU-X SUV மற்றும் D-Max Cabs போன்றன அடங்கியுள்ளன. அத்துடன் சொகுசு பேருந்துகளும் காணப்படுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X