2025 ஜூலை 30, புதன்கிழமை

Isuzu NMR Dump Truck வகையை அறிமுகம் செய்துள்ளது சதொச மோட்டர்ஸ்

Gavitha   / 2016 நவம்பர் 27 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாபாரங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பெறுமதியைச் சேர்ப்பது மற்றும் நிலைத்திருக்கும் செயற்திறனைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கையில் சந்தையில் முதன் முறையாக Isuzu NMR Dump Truck அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தை சதொச மோட்டர்ஸ் (SML)மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SML தலைமைக் காரியாலயத்தில் இந்த அறிமுக நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.  

இந்நிகழ்வில், ஜப்பான் Isuzu நிறுவனம் மற்றும் Itochu Trading ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் SML இன் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். புதிய Isuzu NMR அறிமுகம் என்பது நிறுவனத்தின் வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு, நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் ஒர் அங்கமாக இந்த Isuzu NMR அறிமுகம் அமைந்துள்ளது. இலகு எடை கொண்ட வணிக வாகனப் பிரிவில் ஏக விநியோகஸ்தராக துறையில் SML முன்னிலை வகிக்கிறது.  

புதிய வாகனப் பிரிவின் அறிமுகம் தொடர்பில் SML இன் முகாமைத்துவ பணிப்பாளர் தேசமான்ய திலக் டயஸ் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், Isuzu NMR Dump Truck வகையை எமது வாகனத் தெரிவுகளில் வரவேற்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலகு எடை கொண்ட வாகனங்கள் பிரிவில் முன்னோடி எனும் வகையில், SML நடுத்தரவளவு மற்றும் பாரியளவு வியாபாரங்களுடன் நெருக்கமாகச் செயலாற்றி வருவதுடன், கடந்த தசாப்தத்துக்கும் மேலாக நாம் பெற்றுக்கொண்ட உள்ளார்ந்த தரவுகளின் பிரகாரம், dump truck பிரிவில் உயர் தரம் வாய்ந்த வாகனமொன்றுக்கான தேவை காணப்படுவது பற்றி அறிந்து கொண்டோம்.இந்த சகாய விலையிலமைந்த NMR இனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் வியாபார செயற்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும். குறிப்பாக ஹார்ட்வெயார் மற்றும் நிர்மாணத் துறைகளில் அவர்களின் பங்களிப்பை அதிகளவில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அறிமுகத்துக்கு முன்னதான கேள்வியின் மூலமாக எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. Isuzu NMR வாடிக்கையாளர்களுக்கு மூன்று வருட கால உத்தரவாதம் அல்லது 100,000 கி.மீற்றர்கள் வரை (இதில் எது முதலில் நிகழ்கின்றதோ அதற்கு) உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இது பிரத்தியேகமான சலுகையாகும். மேலும், அவை ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுகின்றமை காரணமாக, Isuzu வாகனங்கள் அவற்றின் உயர் தரம், நீண்ட காலம் நிலைத்திருப்பு மற்றும் உயர் மீள் விற்பனை பெறுமதி ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்கிறது. எமது வாடிக்கையாளர்களின் இலாபத்துக்கு இந்த வாகனம் பங்களிப்பு வழங்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்”என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .