2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

JAT நிறுவனத்தின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

JAT,ஹோல்டிங்ஸ் நிறுவனமானது, அனைத்து தீர்வுகளும் ஒருங்கே கிடைக்கும் “மாஸ்டர் பிளாஸ்டர்” (Master Plaster) என்ற உற்பத்தியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் கட்டட நிர்மாணத்துறையில் புதிய  மாற்றத்தை செய்துள்ளது. இதன்மூலம், சுவர் பூசும் நடவடிக்கையில் மணல் பயன்பாட்டை முற்றாக நீக்குகின்றது. அந்த வகையில், இது தனிச்சிறப்புவாய்ந்த, மிகவும் செலவுச் சிக்கனமான உற்பத்தியாக இது திகழ்கின்ற அதேநேரத்தில் மணல் போன்ற பற்றாக்குறையான இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.   

JAT, நிறுவனத்தின் “பசுமைக் கொள்கையை” கடைப்பிடிக்கும் வகையில், பூகோல சூழல் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளால் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளை “மாஸ்டர் பிளாஸ்டர்” உற்பத்தி மதித்து செயற்படுகின்றது. அதாவது நிர்மாணத் துறையில் ஆற்று மண்ணை அகழ்தல், எடுத்துச் செல்லல், பயன்படுத்தல் போன்ற வேளைகளில் பிரயோகிக்கப்படுகின்ற விதிமுறைகளை பேணும் நடைமுறைகளாக இவை காணப்படுகின்றன. “மாஸ்டர் பிளாஸ்டர்” உற்பத்தியை அறிமுகம் செய்ததன் மூலம், இப்பிரச்சினையை நாம் நீக்கியுள்ளதோடு, விலைகுறைந்த மற்றும் சூழல் நட்புறவான உற்பத்தியையும் வழங்குகின்றோம் என்று JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலியன் குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.   

சுவர்களுக்கு சீமெந்து மேற்சாந்து பூசும் பாரம்பரிய நடைமுறையானது, மண்ணும் சீமெந்தும் கலந்த சாந்தை பயன்படுத்தும் ஒரு செயன்முறையூடாக மேற்கொள்ளப்படுவதோடு, அச் செயற்பாடு Wall putty மூலம் செப்பனிடுவதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. இப்போது, “மாஸ்டர் பிளாஸ்டர்” இனை ஒரே தரத்தில் நேரடியாகப் பூசுவதன் ஊடாக, முன்பிருந்த அதிக செலவான மற்றும் பழமையான இந்த இரட்டைச் செயன்முறையானது அவசியமற்றதாகி இருப்பதுடன், உயர்ந்தளவான செலவுச்சிக்கனமும் கிடைக்கின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X