2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

Kitchen & Bedroom இனால் புதிய இலச்சினை அறிமுகம்

Freelancer   / 2024 ஜூலை 31 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடவசதி திட்டமிடல் மற்றும் உள்ளக வடிவமைப்பை கட்டியெழுப்பல் போன்றவற்றில் கீர்த்தி நாமத்தை பெற்ற, பல தசாப்த கால அனுபவத்தையும் கொண்ட Kitchen & Bedroom, அண்மையில் தனது புதிய இலச்சினையை அறிமுகம் செய்துள்ளது. தமது வாழிடப் பகுதியில் எதிர்பார்க்கும் சொகுசான வசதிகளை நிறைந்திருக்கச் செய்வது எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த புதிய இலச்சினை அமைந்துள்ளது.

நவநாகரீகத்தைப் போலவே, உள்ளக அலங்கார வடிவமைப்பு தொடர்பிலும் அதிகளவு பேசப்படுவதுடன், கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு அப்பால் சென்று, நபர் ஒருவரின் உணர்வுகள் மற்றும் உளவியல் நலனிலும் உள்ளக அலங்கார வடிவமைப்பு தாக்கம் செலுத்துகின்றது. சிறந்த வடிவமைப்புகளுடனான, பிரத்தியேகமான உள்ளகப் பகுதியை கொண்டிருப்பது என்பது, சௌகரியமான, சிறந்த செயற்திறனைக் கொண்ட, கலையம்சங்கள் நிறைந்த வாழிடத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

Kitchen & Bedroom ஐச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அலங்கார வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களினூடாக, விஞ்ஞானத்தையும், கலையையும் ஒன்றிணைத்து, வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், வாடிக்கையாளர்களின் பகுதிகளில் இவை பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், 90 சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தமது வெவ்வேறு உள்ளக அலங்காரத் தேவைகளுக்காக மீண்டும் மீண்டும் அவர்களை நாடுவதனூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kitchen & Bedroom குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. மொஹமட் ருஷ்மி ஸாகுவாஃப் குறிப்பிடுகையில், “உள்ளக அல்ங்கார வடிவமைப்பு மற்றும் இடவசதி திட்டமிடல் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்வதனூடாக, தொழிற்துறையின் புதிய மற்றும் பிந்திய தெரிவுகளை நாட்டில் அறிமுகம் செய்வதற்கான எமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்யும் வகையில், எமது புதிய இலச்சினை அறிமுகம் அமைந்துள்ளது. சிறு சிறு விடயங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றமை வாடிக்கையாளர்களால் பெருமளவு விரும்பப்படுகின்றது. ஏனையவர்களுடன் ஒப்பிடுகையில் எம்மை உயர்ந்த நிலையில் பேணுவதற்கு இது உதவியுள்ளது. நாம் தூர நோக்குடைய திட்டங்களை கொண்டுள்ளதுடன், ஒரு நேரத்தில் ஒரு படியை மாத்திரம் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

சமையலறை மற்றும் வாழிட பகுதிகளில் ஐரோப்பிய தரத்தை கொண்டு வருவதற்கான உள்ளக அலங்கார வடிவமைப்பு வரைபு முதல் கலையம்சங்கள் வரை அனைத்தையும் வழங்குவதுடன், இரு பரிமாண மற்றும் முப்பரிமாண அலங்காரங்களுடன் நிபுணத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுத்து, உயர் வர்ண சமநிலைப்படுத்தல் மற்றும் ஒளியூட்டல் மற்றும் மின் கட்டமைப்பு அலங்காரங்களை வழங்கி, அணியினரால் தோற்றத்தில் சிறந்த பகுதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

“இந்த புதுப்பிக்கப்பட்ட பயணத்தை ஆரம்பிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பிரதம செயற்பாட்டு அதிகாரி எனும் வகையில், FMCG மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறைசார் செயற்பாடுகளிலிருந்து Kitchen & Bedroom வரை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டு, உள்ளக பகுதிகளை மேம்படுத்தி, உணர்வு ரீதியில் மேம்படுத்தல்களை மேற்கொள்ள முடிந்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.” என பிரதம செயற்பாட்டு அதிகாரி முஹம்மட் நவுபல் நூர்தீன் குறிப்பிட்டார். இவர், கூட்டாண்மைத் துறையில் ஆய்வாளர் மற்றும் கூட்டாண்மை பயிற்றுவிப்பாளர் ஆகிய நிலைகள் அடங்கலாக நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தை கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X