2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

LIOCஇன் பொதியிடல் முறைமை அறிமுகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐஓசி நிறுவனம், SERVO மசகு எண்ணெய் உற்பத்திகளுக்கு தனது Global Container பொதியிடல் முறைமையை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்நிகழ்வு தாஜ் சமுத்ரா ஹொட்டலில் நடைபெற்றது.   

புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள Global Container பொதியிடல் முறைமையானது, அதிகரித்த வேகம், பாய்ச்சல், மென்மை, உற்பத்தியின் நீண்ட ஆயுட்காலம், அதிக சுமையைத் தாங்கும் எரிசக்தி ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. இப்புதிய பொதியிடல் முறைமையானது வலிமையான மதிப்புமிகு தோற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றையும் வழங்குகின்றது. இப்புதிய வடிவமானது மேம்பட்ட வலிமையைத் தருவதுடன், அழகிய தோற்றம் மற்றும் உணர்வையும் கொள்வனவாளர்களுக்குத் தருகின்றது.   

லங்கா ஐஓசி பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷ்யாம் போஹ்ரா கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையில் Global Container எண்ணக்கருவை அறிமுகம் செய்து வைப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். LIOC நிறுவனம் எப்போதும் புத்தாக்கத்தையும், மாற்றத்தையும் வலிமையாக முன்னெடுத்து வந்துள்ளதுடன், குறிப்பாக எமது நுகர்வோர் உட்பட, எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மிகச் சிறந்தவற்றை வழங்கிவந்துள்ளது.   

LIOC நாட்டில் 17.5% என்ற சந்தைப்பங்கைத் தன்வசம் கொண்டுள்ளது. அத்துடன் Servo வர்த்தகநாம மசகு எண்ணெய் உற்பத்திகளை மாலைதீவுக்கும் LIOC ஏற்றுமதி செய்துவருகின்றது. 1,000இற்கும் மேற்பட்ட வணிக தரங்கள் மற்றும் கிட்டத்தட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படக்கூடிய வகையில் 1,500இற்கும் மேற்பட்ட உற்பத்திச் சூத்திரங்களுடன், மோட்டார் வாகன, கைத்தொழில் மற்றும் சமுத்திர பிரிவுகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்த மசகு எண்ணெய் தீர்வுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியினை LIOC வழங்கிவருகின்றது. நவீன தொழில்நுட்பம், உயர் தரத்திலான உற்பத்திகளுக்காக இனங்காணல் அங்கிகாரத்தைச் சம்பாதித்துள்ள SERVO IndianOil நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் விசாலமான கலவை மற்றும் விநியோக வலையமைப்பு ஆகியவற்றின் பக்கபலத்தையும் கொண்டுள்ளது.   

இந்தியாவில் மசகு எண்ணெய் மற்றும் கிறீஸ் உற்பத்திகள் மத்தியில் வர்த்தகநாம முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற SERVO வர்த்தகநாமமானது, இந்தியாவின் Superbrands மன்றத்திடமிருந்து “Consumer Superbrand” அந்தஸ்தையும் சம்பாதித்துள்ளது. அதன் வர்த்தகநாம தலைமைத்துவத்திற்காக World Brand Congress அமைப்பிடமிருந்து இனங்காணல் அங்கிகாரத்தையும், CMO Asia அமைப்பிடமிருந்து Master Brand என்ற அங்கிகாரத்தையும் சம்பாதித்துள்ள SERVO உலகில் தற்போது 20இற்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான அளவில் நிலைபெற்றுள்ளது.   

சில்லறை வர்த்தத்துறையைப் பொறுத்தவரையில், LIOC பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு புறம்பாக, நாடெங்கிலும் SERVO மசகு எண்ணெய் விநியோகத்தர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான வலையமைப்பினூடாக SERVO மசகு எண்ணெய் உற்பத்திகள் கிடைக்கப்பெறுகின்றன.LIOC நிறுவனம் அண்மையில் அதிக செயற்றிறன் கொண்ட மசகு எண்ணெய் உற்பத்திகளை அறிமுகம் செய்திருந்தது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X