2025 மே 21, புதன்கிழமை

La Trobe பல்கலைக்கழகம் SLIIT உடன்படிக்கை கைச்சாத்து

Editorial   / 2018 மே 14 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

  உலகளாவிய ரீதியில் காணப்படும் 1.4 சதவீதமான முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின், விக்டோரியாவில் அமைந்துள்ள La Trobe பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது.

அத்துடன் இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் சர்வதேச பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் மாணவர்கள் தம்மை தயார்ப்படுத்திக் கொள்ளக்கூடிய உலக அறிவையும் தமது பாடத்திட்டங்களினூடாக La Trobe பல்கலைக்கழகம் வழங்குகிறது.  

La Trobeபல்கலைக்கழகத்தின் உப வேந்தரும் தலைவருமான பேராசிரியர் ஜோன் தேவார் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைக்கான எமது விஜயம், இலங்கை மற்றும் சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையே நாம் பேணும் உறவை அதிகளவு வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

மாணவர்களின் தொகை அதிகரித்துச் செல்வதையிட்டு, La Trobeபல்கலைக்கழகம் இலங்கையின் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றான SLIITஉடன் இசைவு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. 

இதனூடாக, சர்வதேச அனுபவத்தை மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். La Trobe இல் நாம் மாணவர்களுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குகிறோம்” என்றார்.

இந்த உடன்படிக்கையின் ஊடாக,SLIIT மாணவர்களுக்கு தமது உயர் கல்வியின் இரண்டாவது பகுதியை La Trobe பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்து, La Trobe பல்கலைக்கழகத்திடமிருந்து பட்டத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பை வழங்கும். இருகல்வி நிலையங்களையும் சேர்ந்த அதிகாரிகள், கைகோர்த்து செயலாற்றுவதனூடாக, வெவ்வேறு செயற்றிட்டங்கள் மற்றும் சிந்தனைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள். 

பேராசிரியர் தேவார் தொடர்ந்து தெரிவிக்கையில், “La Trobeபல்கலைக்கழகத்தில் நாம் வர்த்தகம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கல்வி, விஞ்ஞானங்கள், மனித நேயம், சுகாதாரம் போன்ற பிரிவுகளில் கற்கைகளை வழங்குகிறோம். மாணவர்கள் தமது விருப்பத்துக்கமைய பயில வேண்டிய பாடத்தைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என நான் அறிவுறுத்துகிறேன். உலகில் இணையக்குற்றங்கள் பெருமளவு அதிகரித்துச் செல்லும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இணையத்தில் ஊடுருவி மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்கின்றமை காரணமாக, திறன் படைத்த இணைய தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கேள்வியை அதிகரிக்கும்.La Trobeஇல் நாம் இணைய பாதுகாப்பு தொடர்பான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். எமது துறைசார் பங்காளர்களான Optus, CISCO, Symantec, Australia Post பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வர்த்தகம், அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கல் துறைகளில் இணைய இடர்களை எதிர்நோக்கும் இதர நிறுவனங்களின் ஆலோசனைகளின் பிரகாரம் இந்த கற்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரிய தரவுகள் மற்றும் தரவு பகுப்பாய்வு தொடர்பான கற்கைகளையும் நாம் அறிமுகம் செய்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .