2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Logistics International கொள்கலன் இறங்குதுறை விஸ்தரிப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

Hayleys Advantis நிறுவனத்தின் உள்நாட்டுக் கொள்கலன் கையாளல் பகுதியான Logistics International கொழும்பு சேதவத்தையில் 5.5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இடத்தில் 3,500 TEU உள்நாட்டு கொள்கலன் சாலையொன்றை நிர்மாணித்து, அதன் தொழிற்பாடுகளை ஆரம்பித்து வைத்துள்ளது.

ஏற்கெனவே வெலிசறையில் 6 ஏக்கர் விஸ்தீரணத்தில் 3,000 TEU சாலையைக் கொண்டுள்ள நிலையில், இந்த ஏற்பாடானது நிறுவனத்தின் ஒட்டுமொத்த கொள்கலன் கையாளல் ஆற்றலை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கச் செய்துள்ளது.

“இலங்கை, தெற்காசியாவின் பண்ட இடப்பெயர்வு மேலாண்மை மையமாகப் படிப்படியாக வளர்ச்சிகண்டு வருகின்ற இத்தருணத்தில், சேதவத்தைக் கொள்கலன் மையத்தை தேசத்துக்கு அர்ப்பணிப்புச் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். Advantis குழுமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மூலோபாயத்தில் ஒரு முக்கிய கூறென்ற வகையில், இந்த வகையிலான உட்கட்டமைப்பு முதலீடுகள் எமது சாலை சேவைகளின் அளவை மேம்படுத்த எமக்கு உதவி, சந்தையில் முன்னிலை வகிப்பதற்கு வழிகோலும்,” என்று Logistics International நிறுவனத்தின் பணிப்பாளரான பிரசன்ன சமரசிங்க அவர்கள் குறிப்பிட்டார். ISO 9001:2008 நடைமுறைக்கு உட்பட்ட சேதவத்தை சாலை, வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சௌகரியத்தையும், சேமிப்புக்களையும் வழங்குவதுக்கு ஏதுவாக, விரைவான பரிமாற்றம் மற்றும் பதில் நடவடிக்கை நேரங்களை வழங்கும் வகையில் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த இடத்தில் மூலோபாயரிதியாக நிறுவப்பட்டுள்ளது.

தினசரி 110 TEU  அளவைக் கையாளும் ஆற்றல் கொண்ட கொள்கலன் பேணற்சேவை மற்றும் திருத்த வேலைகளுக்கான ஏற்பாட்டு வசதிகளைக் கொண்டுள்ளதுடன், கொள்கலன் கையாளல் உபகரணத்தின் பேணற்சேவைகளை மேற்கொள்ளும் ஆற்றலையும் கொண்டுள்ளது. அது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சாலை முகாமைத்துவ நடைமுறையைப் பேணி வருவதுடன், நாட்டில் கொள்கலன் சாலையொன்றைப் பொறுத்தவரையில் முதன்முறையாக தனித்துவமான கொள்கலன் தடமறியும் முறைமை ஒன்றையும் கொண்டுள்ளது.

பண்ட இடப்பெயர்வு மேலாண்மையில் தொழில்ரிதியாக தேர்ச்சி பெற்ற, மிகுந்த அனுபவம் வாய்ந்த அணியால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற Logistics International சர்வதேச கொள்கலன் குத்தகையாளர்கள் சங்கத்தினால் அங்கிகரிறக்கப்பட்ட 15 கொள்கலன் பரிசோதகர்களுடன் சேவைகளை வழங்கிவருவதுடன், நாட்டில் அதிக எண்ணிக்கையில் பரிசோதகர்களைக் கொண்டுள்ள இந்த வசதிகளை வழங்கிவருகின்ற நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X