2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

MBSL நிறுவனத்தால் கருத்தரங்கு ஏற்பாடு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ் ஸ்ரீ லங்கா அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MBSL) நிறுவனத்தால்,  நாட்டின் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பங்களிப்பு வழங்குதல், தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பை வழங்கும் வகையில், எதிர்காலத்தை அறிந்து கொள்ளவும் பொது மக்களுக்கு அறிவூட்டும் வகையிலும் விசேட கருத்தரங்குத் தொடரை ஏற்பாடு செய்த வண்ணமுள்ளது.  

இந்தக் கருத்தரங்குத் தொடரின் இரண்டாவது கருத்தரங்கு, ‘ரூபாயின் சமகாலம், எதிர்காலம்’ எனும் தலைப்பில் லக்‌ஷ்மன் கதிர்காமர் சர்வதேச இணைப்புகள், வழிகாட்டல் நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கையின் தனியார் துறையைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். அண்மைக் காலமாக வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை ரூபாய் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், தனியார் துறையைச் சேர்ந்த பணிப்பாளர்களுக்கும், சிரேஷ்ட முகாமையாளர்களுக்கும், நிதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வங்கியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், ஏனையவர்களுக்கு ரூபாய் சமகாலமாக வீழ்ச்சியடைந்து செல்வது, எதிர்காலம் தொடர்பான முக்கியமான தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தது.  

இதன் அடிப்படையில், இந்தக் கருத்தரங்கின் பிரதான விரிவுரையை மூலோபாய கற்கைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் துஷ்னி வீரகோனால் முன்னெடுக்கப்பட்டதுடன், Frontier Research நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமல் சதரத்னவால் ‘ரூபாயின் சமகாலம், எதிர்காலம்’ எனும் தலைப்பில் உரையொன்றையும் ஆற்றியிருந்தனர்.

இந்தக் கருத்தரங்கின் ஏனைய அங்கத்தவர்களாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தினேஷ் டி சில்வா, பிரான்டிக்ஸ் குழுமத்தின் குழும நிதிப் பணிப்பாளர் ஹசித பிரேமரத்ன, ஜெட்விங் ஹோட்டல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜீவ அந்தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 MBSL நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் கருத்தரங்குத் தொடரின் முதலாவது நிகழ்வு ‘இலங்கையின் சிறு நடுத்தரளவு தொழிற்துறையின் தற்காலத்தில் காணப்படும் சிக்கல்கள்’ எனும் தலைப்பில் இடம்பெற்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .