Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
MCB வங்கி, தனது புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்ட புறக்கோட்டை கிளையை அண்மையில் மீளத்திறந்து வைத்திருந்தது. இலங்கையிலுள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளின் ஓரங்கமாக இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. கொழும்பு பிரதான வீதியில் இந்த கிளை அமைந்துள்ளதுடன், இலங்கையில் 1996ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதலாவது MCB வங்கிக்கிளையாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. ராஜேந்திரன் மற்றும் என் பி ஃபுட்ஸ் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் நிஹால் செனெவிரட்ன ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி மற்றும் MCB வங்கியின் இதர சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், MCB வங்கியின் இடர் முகாமைத்துவம் - குழும தலைமை அதிகாரி நவுமன் சுக்டாய் மற்றும் கூட்டாண்மை நிதிப்பிரிவு மற்றும் சர்வதேச வங்கியியல் பிரிவு ஆகியவற்றின் குழும தலைமை அதிகாரி முஹ்டாஷிம் அஷாய் ஆகியோர் பங்கேற்றனர்.
“புறக்கோட்டை கிளையை நாம் மெருகேற்றம் செய்து மீளத்திறந்துள்ளமை என்பது உண்மையில் பெருமைப்படவேண்டிய விடயமாகும். இது MCB வங்கிக்கு உரித்தான வளாகம் என்பதுடன், 1996இல் செயற்பாடுகள் முதன் முதலில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கிளையாகும். சில பிரதான வாடிக்கையாளர்களுடனான பயணம் இங்கே ஆரம்பமாகியிருந்ததுடன், இன்றைய நிலையில் மிகவும் உறுதியான முறையில் அதிகரித்து வரும் நிதித்தேவைகளை நிவர்த்தி செய்யும் பல தீர்வுகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. உள்நாட்டு தேவைகளுக்கு பொருத்தமான சில தீர்வுகளை நாம் இலங்கையில் தெரிவு செய்து, அவற்றை சந்தைப்போக்குக்கமைய போட்டிகரமானவையாக வடிவமைத்து மீள அறிமுகம் செய்துள்ளோம். இவற்றை புறக்கோட்டைக்கிளையில் முதன் முறையாக காண முடியும்” என MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி தெரிவித்தார்.
9 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025