Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
OPPO தனது F1s அலைபேசியை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது. தனது F தொடரில் புகைப்படமெடுப்பை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அலைபேசி, இலங்கையிலும், ஏனைய தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த மாதிரியைப் போன்று ‘Selfie Expert’ எனும் தலைப்புடன், 16 MP முன்புற கமெராவைக் கொண்டுள்ளது. இந்த அலைபேசி, செல்ஃபி புகைப்படமெடுத்தலில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் OPPO வின் முன்னணி புகைப்படமெடுக்கும் தொழில்நுட்பம் பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில், OPPO வின் வர்த்தக நாமத் தூதுவர் சோனம் கபூர் கலந்து கொண்டிருந்ததுடன், சகல துறை கிரிக்கெட் விளையாட்டு வீரரும், இடது கைத்துடுப்பாட்ட வீரருமான யுவராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். F1s sports என்பது 13 MP பின்புற கமராவையும், வேகமான ஃபிங்கர்பிரின்ட் ரீடர், 3075 3075 mAh திறன் கொண்ட பற்றரி, 32GB ROM மற்றும் ட்ரிப்பில் ஸ்லொட் கார்ட்ட்ரே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
F1 என்பது அறிமுகம் செய்யப்பட்டது முதல் புகழ்பெற்றுத் திகழ்வதுடன், பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு சிறந்தப் புகைப்பட அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் என OPPO உப தலைவரும், சர்வதேச மொபைல் வியாபாரத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான ஸ்கை லீ தெரிவித்தார்.
'பத்து மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் F1 மற்றும் F1 Plus ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள F1s என்பதும் இதே போன்று பெருமளவு வரவேற்பைப் பெறும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago