Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
OPPO, தனது புதிய F-தெரிவான OPPO F9 ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. VOOC Flash Chargingஉடன் 5 நிமிடங்கள் மாத்திரம் சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை அலைபேசியில் உரையாடக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் துறையின் முதலாவது Gradient Color Design ஐ கொண்ட F9,OPPO வின் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புத்தாக்கமான நிபுணத்துவத்துடன் பிரத்தியேகமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ரூ. 54,990 எனும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள OPPO F9, Sunrise Red மற்றும் Twilight Blue வெவ்வேறு வர்ணத் தெரிவுகளில் கிடைக்கும்.
துறையின் முதலாவது 6.3 அங்குல ‘Waterdrop Screen’ வடிவமைப்பு, 90.8%எனும் உயர்ந்தளவு திரை முதல் உடற்கட்டமைப்பு, பிரத்தியேகமான gradient color வடிவமைப்பு மற்றும் 3500 mAh பற்றரி ஆகியவற்றைக் கொண்ட OPPO F9 இனால் சிறந்த selfie திறனுக்கு மேலதிகமாக மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் ஒப்பற்ற அனுபவம், வேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் பற்றரி சார்ஜ் போன்றன அடங்கியுள்ளன.
இந்த அறிமுகம் தொடர்பில் OPPO ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில், “அறிமுகம் செய்யப்பட்டுள்ள OPPO F9 பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் OPPOஇன் காப்புரிமையை பெற்ற துரித சார்ஜ் செய்யும் தொழில்நுட்பமான VOOC அம்சம் அடங்கியுள்ளதுடன், இதனூடாக குறுகிய நேரத்தில் தொலைபேசியை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.அத்துடன், கண்கவர் வகையில் வர்ணத் தெரிவுகளிலும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. OPPO F9 ஐ இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் விறுவிறுப்பு அடைந்துள்ளோம். திரையில் waterdrop அலங்காரத்தை கொண்டுள்ளதுடன், இலங்கையின் தோற்றத்தை போன்ற அமைப்பில் இது காணப்படுகிறது. இவ்வாறான ஒரு water-drop அலங்காரம் இலங்கையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
5 hours ago