Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
INCO 2016 கைத்தொழில் கண்காட்சியில் சிறந்த சுய கண்காட்சி உற்பத்திக் கூடத்துக்கான தங்க விருது Johkasou Engineering Lanka தனியார் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. Omegaa Johkasou Engineering Lanka நிறுவனம் ஜப்பானில் உற்பத்திச் செய்யப்படுகின்ற புதிய தொழில்நுட்பத்திலான சாதனங்களையும் எண்ணக்கருக்களையும் இலங்கையர்களிடம் சேர்த்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நீண்டகால நோக்குடன் செயற்பட்டு வருகின்றது.
ஜப்பான் நாட்டின் பிரபல குபோட்டா நிறுவனத்தினால் உற்பத்திச் செய்யப்படுகின்ற, குடிமனை சார் கழிவு நீரை சுத்திகரிக்கும் தொகுதிகளை இலங்கையில் விநியோகிக்கும் அங்கிகாரம் பெற்ற ஏக முகவராக Omegaa Johkasou Engineering Lanka நிறுவனம் திகழ்கிறது.
Omegaa Johkasou Engineering Lanka நிறுவனம் அறிமுகப்படுத்துகின்ற நீர் சுத்திகரிப்புத் தொகுதி பக்டீரியா செயற்பாட்டினால் அசுத்தமாகின்ற நீரை சுத்திகரிக்கின்றது. இதன் மூலம், அசுத்தமான நீரை சுத்திகரித்து மீள பயன்படுத்தக்கூடிய ஆற்றல் கிடைக்கின்றது. மேற்படி நீர் சுத்திகரிப்புத் தொகுதிக்கு 25 ஆண்டுகள் வரை உத்தரவாதம் கிடைப்பதோடு இதனை சுமார் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியுமென்பது நிறுவனத்தின் கருத்தாகும். அத்தோடு அத் தொகுதியை இலவசமா பொருத்துவதும் விறபனைக்கு பிந்திய சேவையும் இதன் சிறப்பம்சங்களாகும்.
Omegaa Johkasou Engineering Lanka தனியார் நிறுவனத்தை தொடங்கி இரண்டு மாதங்களில் விருது கிடைத்துள்ளமையிட்டு உண்மையிலேயே நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். இது நாம் ஒரே குழுவாக உழைத்தமைக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கையில் அசுத்தமான நீரை சுத்தமாக்கித் தருவதில் முன்னோடியாக விளங்குவதை நோக்கமாக கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு நாம் தயார்.’ என Johkasou Engineering Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் பிரபாத் தஹநாயக்க தெரிவித்தார்.
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago